Wednesday, February 17, 2010

பதிவர்கள் புத்தகங்கள்...சின்னதாய் ஒரு அலசல்

பதிவுலக நண்பர்கள், திரு.நர்சிம், திரு.பரிசல்காரன், திரு.கேபிள் சங்கர் ஆகிய மூவரும் தங்கள் முதல் படைப்பை சிறுகதைத் தொகுப்புகளாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.. அது எங்களுக்குத் தெரியும்.. நீ என்ன சொல்லவந்த.. அதை சொல்லு முதல்ல.. அப்படின்னு சொல்றீங்களா??? ரைட்டு..

இவர்களின் இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே, இவர்களின் பதிவுகளில் படித்தது தான் என்றாலும், புத்தகமாய் அதைக் காணும் பொழுது ஒரு இனம்புரியா சுவாரஸ்யம்.. மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சில் தான்(வெவ்வேறு நாட்களில்) படித்தேன் என்றாலும் நான் படித்த வரிசையிலேயே பகிர்ந்து கொள்கிறேன்..

==========================================

அய்யனார் கம்மா: (ஆசிரியர்: நர்சிம்)

நான் காசு கொடுத்து வாங்கிய முதல் சிறுகதை புத்தகம்.. மொத்தம் பதிமூன்று கதைகள்.. இதில் முதல் கதையே அய்யனார் கம்மா தான்.. அழகான கிராமத்துக்கு நம்மை கூட்டிப் போய், மாட்டுக்கு லாடம் அடிப்பதைக் காட்டித் தந்து, வெள்ளந்திப் பேச்சுகளின் சுவாரஸ்ய நடையினூடே நம்மையும் அறியாமல், சற்று நேரத்தில் கதையின் நாயகன் செய்யப் போகும் கொலைக்கு நம்மையும் சாட்சியாக்கி விடுகிறார். இந்தக் கதையில் என்னை மிகக் கவர்ந்த வரிகள்.. ஒரு மாட்டின் உரிமையாளர், லாடம் அடிப்பவனிடம் சொல்லும் "எம்புட்டு பாரம்ண்டாலும் இழுத்துப் புடும்யா எந்தெய்வம்".. தான்.. அந்த வரியில் தான் எத்துனை நன்றி கலந்த நம்பிக்கை..
அடுத்த கதை.. தந்தையுமானவன்.. என்னை பொறுத்தவரை நர்சிம்மின் மாஸ்டர் பீஸ்.. பிறந்த அன்றே குழந்தையை எமனிடம் வாரிக் கொடுப்பதென்பது எத்தனைப் பேருக்கு நடந்திருக்கும்? இருந்தாலும் அந்த தந்தையின் மனவேதனையை படிப்பவர்களும் புரிந்து கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ இயலுமா??... முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தன் எழுத்தால்.. இந்தக் கதையின் வீச்சு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.. படிக்காதவர்கள் தேடித் பிடித்து படிக்கவும்..

தொடர்ந்து வரும் கதைகளில் வெகு லாவகமாய் தேர்ந்த வரிகளின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் நம்முள் விதைத்துச் செல்கிறார் நர்சிம்.. (உ.ம்:: செம்பட்டைக் கிழவி, ம'ரணம்', சந்தர்ப்ப வதம்).. நகைச்சுவைக்கு "தலைவர்கள்", மற்றும் "வெத்தலைப் பெட்டி" ஆகியவையும் உண்டு..


============================================

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
(ஆசிரியர்: பரிசல்காரன்)


கவித்துவமான புத்தகத் தலைப்பு.. 17 கதைகள், 71 பக்கங்கள்... முதல் கதையான "தனிமை-கொலை-தற்கொலை"யில் கதையின் நாயகனின் நட்பும் காதலும் நிறைந்த குழப்பமான மனநிலையை பரபரப்பான சொற் பிரயோகங்கள் மூலம் படிக்கும் நம்மிடம் தந்துவிடுவது மிகச் சிறப்பு.. கிட்டத்தட்ட எல்லா கதைகளையும், கதையின் நாயகனே நம்மிடம் விவரிப்பது போல் இருப்பதால், ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மால் காட்சிகளையும் கதையின் முக்கிய பாத்திரங்களையும் அருகிலிருந்து கவனிக்க முடிகிறது.. பரிசல் தனது வழக்கமான நேர்த்தியான மற்றும் தெளிந்த எழுத்து நடையில் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார், ஒரு பிரச்சனையும் இல்லாமல்..

பட்டர்பிளை எப்ஃபெக்டும், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதையும் சிம்ப்ளி சூப்பர்ப்.. இவரின் எல்லாக் கதைகளிலும் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நாம் அனைவரும் சந்தித்திருக்கக் கூடிய அல்லது அதிகம் கேள்விபட்டிருக்கக் கூடிய ஒரு நபரை நம் கண்முன் நிறுத்துவதால், நம்மால் இன்னும் ஆழ்ந்து வாசிக்க முடிகிறது.. (உ.ம்:: மாற்றம், நட்பில் ஏனிந்த பொய்கள், ஸ்டார் நம்பர் ஒன்..)

மேலும், நான் அவன் இல்லை, கைதி, மனசுக்குள் மரணம் போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த கதைகளும், உணர்வுகளின் வலியை வருடிக் கொடுக்கும் மயிலிறகுகளாய் இருளின் நிறம், நட்சத்திரம் ஆகிய கதைகளும் உண்டு..


===============================================

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. (ஆசிரியர்: கேபிள் சங்கர்)


"முத்தம்" என்ற சுறுசுறு கதையில் ஆரம்பித்து மொத்தம் பதிமூன்று கதைகள்.. சொன்னது போலவே, விறுவிறுப்பான நடையில் புதிய தளங்களில் அமைந்துள்ளது எல்லா கதைகளும்.. கேபிள் சங்கர் அவர்கள், திரை-இயக்குனர் என்பதால் காட்சிப் படுத்தல்கள் வெகு இயல்பாய் அமைவது கதைகளுக்கு கூடுதல் பலம்..

இரண்டாவது கதையான "லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்" வாழ்கை வாழ்வதற்கே என்பதை அழுத்தமாய் பதிவு செய்கிறது.. முக்கால்வாசிக் கதைகளில், வர்ணனைகள் காமத்தின் உச்சம் தொட்டு திரும்புகின்றது.. ஆனால் அவை அந்தந்த கதைக்குத் தேவையானவைகள் தான் என்பது வாசிப்பு நிறைவுறும் போது கவனத்துக்கு வருகிறது..

மிகச்சிறந்த கதைகளென்று குறிப்பிட வேண்டுமானால், காதலின் வீரியம் சொல்லும் "மாம்பழ வாசனை" மற்றும் உறவுகளின் உள்ளம் சொல்லும் "நண்டு" ஆகியவற்றைச் சொல்லலாம்.. "ஆண்டாள்", "துரை-நான்-ரமேஷ் சார்" இரண்டும் கூட மேற்சொன்ன வகையறாவே..

"போஸ்டர்", "காமம் கொல்", "ராமி-சம்பத்-துப்பாக்கி" ஆகிய சுவாரஸ்ய திருப்பங்கள் நிறைந்த கதைகளும் உண்டு..


======
சரி.. இவ்வளவு சொன்னியே, ஒரு குறையும் இல்லையா அப்படின்னு கேட்டீங்கன்னா, நிச்சயம் சிறுசிறு குறைகள் இருக்கு... பதிவில் படித்தபோது இருந்த டெம்போவுக்கும், புத்தகமாய் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்துக்கும் சற்றேறக்குறைய வித்தியாசம் தெரிகிறது.. ஒரு சில கதைகள் சட்டென முடிந்துவிடுவது போன்ற பிரமையும் ஏற்படுகிறது..

ஆனால்.. ஒட்டுமொத்தமாய் பார்க்கும்போது.. இவைகள் அனைத்தும் எளிதில் களையக் கூடியவை தான் என்பதும், இவர்களின் எதிர்வரும் படைப்புகளில் இவை நிச்சயம் காணப்படாது என்பதுமே நான் புரிந்து கொண்டது..

எனவே, முடிந்தவர்கள் இந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.. வாழ்த்துங்கள்..!!!

24 comments:

 1. //முடிந்தவர்கள் இந்த புத்தகங்கள் வாங்கிப் படியுங்கள்.. //

  ஏங்க மணி நீங்க படிச்சுட்டிங்கதானே அந்த புத்தகத்தை கொஞ்சம் அனுப்புறது...

  ReplyDelete
 2. ஒரே நேரத்தில் மூணு புக்கு விமர்சனமா? சாமி !!கண்ணை கட்டுது !!

  ReplyDelete
 3. @ சங்கவி
  ===============
  கண்டிப்பாக தரேங்க சங்கவி.. ;)


  @ மோகன் குமார்
  ===================
  :) குறும்பு சார் நீங்க.. :)

  ReplyDelete
 4. //படியுங்கள்.. வாழ்த்துங்கள்//

  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அதேதாம்ப்பா..

  பதிவுக்காக எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் இனிமேல் புத்தகத்திற்கென எழுத வேண்டும். அவற்றை தொகுத்து புத்தகமாக்கப்பட்டால் இவர்களின் திறமை இன்னும் தெளிவாகும்..

  நல்ல பதிவு

  ReplyDelete
 6. ரைட்டு .. நானும் படிச்சிட்டு கருத்த பதியரேன்..:))

  ReplyDelete
 7. நல்ல அறிமுகம்னே, நன்றி !

  ReplyDelete
 8. நிச்சயம் அடுத்து வரும் தொகுதிகளில் நீங்கள் சொன்ன குறைகளை களைய முயல்வோம்..:) ( என்னா ஒரு நம்பிக்கை)

  கேபிள்சங்கர்

  ReplyDelete
 9. அன்பிற்கு நன்றி மணிகண்டன்.

  சுருக் அதே சமயம் நறுக் விமர்சனம். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை அடுத்தடுத்தடுத்த படைப்புகளில் நிறைவேற்றுவோம்.

  ReplyDelete
 10. @ T.V. ராதாகிருஷ்ணன்
  ========================
  நன்றி ராதாகிருஷ்ணன் சார்


  @ கார்க்கி
  ==========
  அதே தான் பாஸ்.. நன்றி..


  @ நர்சிம்
  =========
  நன்றிக்கு நன்றி நர்சிம்.. ;)


  @ ஷங்கர்
  ==========
  அவசியம் செய்யுங்க தலைவா..


  @ ஜெனோவா
  ==============
  நன்றி நண்பா... ;)


  @ கேபிள் ஷங்கர்
  ==================
  தல.. அரசியல்வாதி மாதிரியே சொல்றீங்க... நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.. :)


  @ பரிசல்காரன்
  ================
  விரைவில் அடுத்த படைப்புகளுடன் வாங்க சார்... ஊக்குவிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்..

  ReplyDelete
 11. அருமையான விமர்சனம். என்னை மிகவும் கவர்ந்தது ம'ரணம்' தான்

  ReplyDelete
 12. ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து தூக்கி விடும் இந்த நட்பின் அழகு மயக்குகிறது

  ReplyDelete
 13. அருமையான பகிர்வு மணிகண்டன் என்னோட பகிர்வையும் பாருங்க

  ReplyDelete
 14. @ ரோமியோ
  ==================
  நன்றி ரோமியோ... உங்கள் விமர்சனம் எப்போ???


  @ நாய்க்குட்டி மனசு
  =====================
  நன்றிங்க.. :)


  @ தேனம்மை
  ==============
  வாசித்தேன் மேடம்.. சூப்பரா எழுதியிருக்கீங்க..


  @ அகநாழிகை
  ===============
  நன்றி வாசு சார்

  ReplyDelete
 15. Thanks Mani.. I always love to read short stories.. They deliver the message more pwerfully than a full length novel... I'll try to buy these during my next India trip!

  ReplyDelete
 16. அட...மூணு புத்தக விமர்சனம் நம்ம ரெண்டுபேருமே பண்ணியிருக்கோம்..! ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி!

  நல்லா இருக்கு மணிகண்டன்...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. /Thanks Mani.. I always love to read short stories.. They deliver the message more pwerfully than a full length novel... I'll try to buy these during my next India trip!/

  you can buy these book through online also..
  லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்
  http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=122

  டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்
  http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121

  அய்யனார் கம்மா
  http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=80

  ReplyDelete
 18. உங்க விமர்சனம் சிறப்பா இருந்தது.. இதுதான் முதல் முறை உங்கள் தளத்திற்கு
  வருவது.. இனிமேல் தொடர்ந்து வருவேன்.

  ReplyDelete
 19. நன்றி கவிதை காதலன்..
  அவசியம் வாங்க...

  ReplyDelete
 20. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete