Tuesday, February 16, 2010

கிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள உறவு எப்படிப் பட்டதுன்னா... நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்..( டேய், நீ இப்போவரைக்கும் அவ்வளோ தானடா படிச்சிருக்கே) சரி விடுங்க.. விஷயத்துக்கு வருவோம்..
================================================================
பதிவர் நண்பர் மோகன் குமார் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார்.

வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? சச்சின், லாரா

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? சாஹித் அப்ரிடி (அதிரடி தவிர எல்லாமே அழுகுணி தான்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் க்ளென் மெக்ராத்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் தில்ஹாரா பெர்னாண்டோ

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சின், ஷேவக், பாண்டிங்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் மிஸ்பா உல் ஹக்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட், கங்குலி, மைக் ஹஸ்ஸி

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் ரஸ்ஸல் அர்னால்ட்

11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் இன்சமாம் உல் ஹக்

13. பிடித்த ஆல்ரவுண்டர் பிளின்டாப், சைமண்ட்ஸ்

14. பிடித்த நடுவர் சைமன் டாபல், டேவிட் ஷெபெர்ட்

15. பிடிக்காத நடுவர் அசோகா டீ சில்வா, அமீர் சாயீபா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் சித்து, ரவிசாஸ்திரி, ஹர்ஷா போகலே, சுனில் கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் டோனி கிரெய்க் (நம்மாளுங்க தூக்கி அடிச்சாலே அவுட்'ன்னு கத்துவார்)

18. பிடித்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி ஒப்புக்கு ஆடும் நாடுகள்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா - பாகிஸ்தான், இந்தியா -ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே - பங்களாதேஷ்

22. பிடித்த அணி தலைவர் ஹான்சி குரோன்யே, சவ்ரவ் கங்குலி

23. பிடிக்காத அணித்தலைவர் யூனுஸ் கான்

24. பிடித்த போட்டி வகை ட்வென்டி ட்வென்டி

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சிவ சுந்தர் தாஸ் மற்றும் சடகோபன் ரமேஷ்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், லாரா

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின்


நான் அழைக்கும் பதிவர்கள்:

நர்சிம்
நாஞ்சில் பிரதாப்
ரோமியோ பாய்

16 comments:

  1. //17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் டோனி கிரெய்க் (நம்மாளுங்க தூக்கி அடிச்சாலே அவுட்'ன்னு கத்துவார்)//

    அட, ஆமாம்.இவர சுத்தமா மறந்துட்டேன் நான்.

    சிவசுந்தர்தாஸ்-லாம் நல்லாவே ஞாபகம் வச்சிருக்கிங்க

    உங்களுக்கும் சச்சின்தான் பேவோரைட்டா? ரைட்டு
    :-)

    ReplyDelete
  2. தொடர்ந்தமைக்கு நன்றி நண்பா. நரசிம்மை தொடர அழைக்கிறீங்களே. அவருல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க. தொடர் பதிவெல்லாம் நம்மளை மாதிரி சின்ன பதிவர்களுக்கு; தொடர்கிறாரான்னு பார்ப்போம்

    ReplyDelete
  3. @ வரதராஜுலு
    ==============
    முதல் வருகைக்கு நன்றி வரதராஜுலு சார்..

    சிவ சுந்தர் தாசை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? பிட்ச்சில் இருக்கும் புற்கள் செடியாகி மரமாகும் வரை மொக்கை மட்டுமே போட்டு கடுப்படிப்பார்..

    சச்சின் இல்லாம இந்திய கிரிக்கெட்டா???

    :)

    ReplyDelete
  4. @ மோகன் குமார்
    ================
    நீங்க அழைத்ததற்கும் நன்றிங்க மோகன்..
    என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நர்சிம் தொடர்வாருன்னு நம்பறேன்..

    ReplyDelete
  5. கிரிக்கெட் நல்ல பார்ப்பீங்க போலருக்கு..

    ReplyDelete
  6. அழைத்ததற்கு ரொம்ப நன்றி மணிகண்டன்.
    சின்ன வயசுல ஒரு ஆர்வத்துல விளையாண்டதுண்டு, டிவில மேட்ச் பார்த்ததோட சரி... இப்பல்லாம் சுத்தாம ஆர்வம் கிடையாது மணி.

    கிரிக்கெட்டுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. பணம், விளம்பரம் மட்டுமே இப்ப கிரிக்கெட்டோட முக்கிய நோக்கமாயிடுச்சு.
    இன்னொரு முக்கிய விசயம் இப்பவுள்ள நிறைய வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் பேர் கூட சரியா தெரியாது. ஒப்புக்காக பதிவு போடுறதை விட பதிவு போடாம இருக்கறதே நல்லது.
    ரொம்ப நன்றி மணிகண்டன்.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி பிரதாப்..
    அடடா.. நீங்க எல்லா பதிவையும் ட்வென்டி ட்வென்டி மாட்ச் மாதிரி பரபர'ன்னு எழுதுவீங்களே.. கிரிக்கெட் அதிகம் பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்..
    பரவாயில்லை.. விடுங்கள்.. பட், உங்க நேர்மை எனக்கு புடிச்சிருந்தது.. :)

    மக்களே.. பிரதாப் ஏற்க மறுத்த பணியினை யார் வேண்டுமானாலும் தொடரலாம்.. :)

    ReplyDelete
  8. அடடா கிரிக்கெட்டா நான் இந்த ஆட்டைக்கெல்லாம் வரலப்பா மணிகண்டன் என் கல்லூரிக் காலத்துல விருப்பத்தோட பர்த்தது நமக்கு இந்திய பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் தான் தெரியும் வேற ஸ்ரீகாந்த் கவாஸ்கர் கபில்தேவ் கிர்மானி ரவி சாஸ்த்ரி இம்ரான்கான் ஜாவீத் மியாந்தத் இவங்கதான் தெரியும்

    ReplyDelete
  9. அட விட மாட்டின்களோ

    ReplyDelete
  10. நான் இந்த ஆட்டத்தில இருந்து sss ஆகிறேன்

    ReplyDelete
  11. இது நம்ம ஏரியா இல்ல.. நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் மணி.. :)

    ReplyDelete
  12. @ தேனம்மை
    ==============
    மேடம்... நீங்க சொன்ன ஆளுங்க எல்லாம் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ரிடையர்ட் ஆயிட்டாங்க... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.... :)


    @ நாய்க்குட்டி மனசு
    ====================
    தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிங்க நாய்க்குட்டி.. உங்க உண்மையான பேர சொன்னா புண்ணியமா போகும்... :)


    @ சஞ்சய்
    ==========
    முதல் வருகைக்கு நன்றிங்க சஞ்சய்.. உங்களை சந்தித்ததில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.. விரைவில் மீண்டும் சந்திப்போம்... :)

    ReplyDelete
  13. @ சங்கர்
    ============
    அவங்கள விட சொல்லுங்க.. நான் விடறேன்.. ;)
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்..

    ReplyDelete
  14. அழைதைமைக்கு நன்றி சகா. எழுதிடுவோம்.

    ReplyDelete
  15. மோகன் குமார் said...
    தொடர்ந்தமைக்கு நன்றி நண்பா. நரசிம்மை தொடர அழைக்கிறீங்களே. அவருல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க. தொடர் பதிவெல்லாம் நம்மளை மாதிரி சின்ன பதிவர்களுக்கு; தொடர்கிறாரான்னு பார்ப்போம்//;););)

    ee

    ReplyDelete
  16. @ ரோமியோ
    ===============
    எழுதுங்க தல..


    @ நர்சிம்
    =========
    :)

    ReplyDelete