Sunday, March 28, 2010

பதிவர்கள் சங்கம் / சங்கமம் - அடுத்தது என்ன?

நேற்று நடைபெற்ற, பதிவர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான சந்திப்பிற்கு நானும் சென்றிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான/அறிமுகமில்லாத பதிவர் நண்பர்களையும், சங்கம் துவக்குவதில் இருக்கும் சாதக/பாதகங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் சந்திக்க நேர்ந்தது. நானும் என் சிற்றறிவுக்கு(?) எட்டிய சில சந்தேகங்களை எழுப்பினேன்.

பதிவர்கள் தனித்தனி குழுக்களாக செயல்படாமல் ஒருங்கிணைந்து ஒரே குழுமமாய், குடும்பமாய் இயங்கும் வசதியை அமைத்துத் தரவிருக்கும் இந்த பதிவர் சங்கம் அமைக்கும் ஆலோசனையை நான் முற்றிலும் வரவேற்கிறேன். கிட்டத்தட்ட அங்குவந்திருந்த அனைவரின் மனோநிலையும் அப்படித் தான் இருந்தது.

ஆனால், ஒரு குழுவாய் எப்படி இயங்கப் போகிறோம், ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன, இதன்மூலம் பதிவர்களுக்கும், பதிவர்களால் மற்றவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை/தீமைகள் என்னவாக இருக்கும், பொதுவில் ப்ளாக் என்பது நம் சொந்த விருப்பு வெறுப்புகளையும், படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாயிற்றே; இதில் தனி நபர் சுதந்திரம் (இப்ப மட்டும் என்ன வாழுது) எத்துனை முக்கியத்துவம் பெறும் போன்ற அடிப்படை கேள்விகள் தான் எனக்குள் எழுந்தவை...

உண்மையைச் சொல்லப் போனால் இவைபற்றித் தான் நேற்று விவாத்திருக்க வேண்டும். ஏனெனில் வந்திருந்த அனைவருக்குமே ஒருகுழுவாய் நாம் சங்கமிக்கப் போகிறோம் என்கிற உணர்வுடன் மட்டுமே அங்கு கூடியிருந்தார்கள். திரு.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு.நர்சிம், திரு.டோண்டு, திரு.அர்விந்த்(பெங்களூர்), திரு.லக்கி ஆகியோரின் பேச்சுக்களும் அவ்வண்ணமே இருந்தது. ஆனால்.. சங்கம் வேண்டுமா, வேண்டாமா என்கிற ரீதியில் விவாதம் திசை திரும்பியது மாதிரி ஒரு உணர்வு.

காரணம், நான் முன்பு கூறியதுபோல் அடிப்படையான விஷயங்களை சரியாக தயார் செய்திராமல், நேரடியாக விவாதத்தை துவக்கியது தான். "அத்தியாவசிய நேரங்களில் பதிவர்கள் தங்களுக்குள் தங்களாலான உதவிகளை செய்யவும், பெற்றுக் கொள்ளவும் இந்த சங்கம் ஒரு காரணமாய் இருக்கட்டும்" என்ற நர்சிம்'மின் பேச்சு மட்டுமே ஆரோக்யமான சிந்தனையாய்ப் பட்டது. (அவரை முன்னால் பேச அனுமதித்திருக்கலாம்.. ஒருவேளை சந்திப்பு ஓரளவிற்காவது சரியான திசையில் சென்றிருக்கும்.)

அதைவிடுத்து, கூகிளைப் போய் கேட்கலாம், அரசாங்கத்தைப் போய் கேட்கலாம், அவங்களைப் போய் கேட்கலாம், இவங்களைப் போய் கேட்கலாம், ஊர் கூடினாத் தான் தேர் இழுக்க முடியும், ஒத்தை மரம் தோப்பாகாது என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது அசுவாரஸ்யமாய் இருந்தது.

நாம் அடுத்தகட்டம் நோக்கி செல்லும்போது அதற்கான முன்னேற்பாடுகளையும், அவ்விடத்தில் நமக்கான பணியென்ன, நமது பங்களிப்பு என்ன ஆகிய குறைந்தபட்ச விஷயங்களையாவது சிந்திக்க வேண்டும். அப்போது தான், நம் நகர்வும் ஆக்கப் பூர்வமாய் இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம், அங்க போய் பண்ணிக்கலாம் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது.

நமது அடுத்த சந்திப்பில் இதுபற்றி மட்டுமே பேசுவோம். இது தான் என் கருத்து. மற்றபடி, சங்கம் வேண்டுமென்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த சங்கத்தில் இணைய விரும்புவோருக்கு வசதியாய் மின்னஞ்சல் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.. (tamilbloggersforum@gmail.com) நான் அனுப்பியாச்சு.. அது தொடர்பான நண்பர் "பலாபட்டறை" ஷங்கர் அவர்களின் பதிவு இங்கே!

19 comments:

 1. சரிதான் நண்பரே, எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்களும் எனக்கு கிடைத்த ஒரு அன்பு நண்பர். இது போன்ற நட்புகளுக்காக ’மட்டும்’ நான் ’எதிலும்’ சேர்கிறேன்..:)) மற்றவைகள் எனக்கு பொறுட்டல்ல.

  அன்புக்கு மிக்க நன்றி மணிகண்டன்.:))

  ReplyDelete
 2. என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க கூடிய இடத்தில் “என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேள்விகள். உங்கள் கேள்விகளும் அதில் உண்டு.

  ReplyDelete
 3. மன்னிக்கவும் மணிகண்டன் அந்த மின் அஞ்சல் என்னால் துவங்கப்பட்டதல்ல.

  ReplyDelete
 4. @ ஷங்கர்:
  உங்கள் அன்புக்குக் நன்றி ஷங்கர்.. மின்னஞ்சல் விவரம் சரி செய்துவிட்டேன். :)


  @ மணிஜீ:
  மணிஜீ.. மன்னிக்கவும்.. "நாம் என்ன செய்யப் போகிறோம்" என்பதே நானும் கேட்டது. என்ன செய்யப் போகிறீர்கள் என்று அல்ல.. மேலும் நாம் என்ன செய்யலாம் என்கிற ரீதியில் யாரும் பேசவில்லை.. கேள்வி எழுப்பியதைத் தவிர.. என்னையும் சேர்த்துத் தான்..

  ReplyDelete
 5. நடைபெற்ற..நடை பெறும் காரியங்கள் அவரவர் ஈகோ வையேக் காட்டுவதால்..தற்சமயம் மௌனியாய் இருப்பதே சிறந்தது என எண்ணுகிறேன்

  ReplyDelete
 6. அன்பின் மணி,
  அமைதி...அமைதி...பொறுமை எருமையோட பெருசு..எல்லாம் முருகன் அருளால் நல்லபடியா நடக்கும் நண்பரே..

  ReplyDelete
 7. http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html

  என் கருத்துக்கள்!!

  ReplyDelete
 8. சங்கத்து ஆள யாரோ அடிச்சிட்டாங்கலாம்.. அது யாருக்கு கொஞ்சம் கார்க்கி பதிவை பாருப்பா ..

  ReplyDelete
 9. ////T.V.ராதாகிருஷ்ணன் said...
  நடைபெற்ற..நடை பெறும் காரியங்கள் அவரவர் ஈகோ வையேக் காட்டுவதால்..தற்சமயம் மௌனியாய் இருப்பதே சிறந்தது என எண்ணுகிறேன்
  //

  அஃதே

  ReplyDelete
 10. //
  T.V.ராதாகிருஷ்ணன் said...
  நடைபெற்ற..நடை பெறும் காரியங்கள் அவரவர் ஈகோ வையேக் காட்டுவதால்..தற்சமயம் மௌனியாய் இருப்பதே சிறந்தது என எண்ணுகிறேன்
  //


  //
  நர்சிம் said...
  அஃதே
  //

  ரிப்பீட்டேய்....

  ReplyDelete
 11. @ T.V.ராதாகிருஷ்ணன்:
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி TVR சார்..


  @ மயில்ராவணன்:
  ஆகட்டும் சார்.. நீங்க சொல்றா மாதிரி பொறுத்திருப்போம்.. நல்லவை நடக்கும் வரை..


  @ செந்தில்நாதன்:
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.செந்தில்


  @ கார்க்கி:
  நானும்.. நானும்.. :)


  @ ரோமியோ:
  கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லைன்னு நெனைக்கிறேன்னு சொல்லிக்கிட்டே வண்டிய விடுவோம் வாங்க.. :)


  @ நர்சிம்:
  :)


  @ வெண்பூ:
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க வெண்பூ..

  ReplyDelete
 12. இந்தமாதிரி கூட்டங்களுக்கு ஹோம் வொர்க் பண்ணாம வந்தா முட்டி போட்டு மூணு தரம் நடக்க சொல்லறதுதான் ஒரே வழின்னு நினைக்கிறேன். அருமையான கருத்தாய்வு கூட்டமாக அமைந்திருக்க வேண்டிய ஒன்று. :(

  ReplyDelete
 13. என்னங்க பின்னூட்டம் இடுவதை இவ்ளோ கஷ்டமா வைத்திருக்கீங்க. கொஞ்சம் சிஸ்டத்தை மாற்றுங்க ப்ளீஸ். :)
  மேலும், டெம்ப்ளேட் அழகா இருக்குங்க.

  ReplyDelete
 14. @ விதூஷ்:
  வருகைக்கு நன்றிங்க.. அடுத்தமுறை தெளிவாக தயார் செய்து கலந்தாலோசிப்போம்..
  பின்னூட்டம் பிரச்சனை கொடுக்குதா.. என்னன்னு பார்க்கிறேன்..
  டெம்ப்ளேட் மாத்தலாமின்னு இருக்கேன்.. டைம் தான் இல்ல.. :)

  ReplyDelete
 15. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 16. நல்ல விஷயம்தான்...

  ReplyDelete
 17. நல்லவிசயம் நல்லது செய்யுங்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 18. The Tamil script is difficult to follow, but I do understand that you had gone to a Tamil Bloggers meet... Anyways, glad to know you from the Indiblogger's meet in Chennai today. Do keep in touch.

  (www)DestinationInfinity(org)

  ReplyDelete