Sunday, December 27, 2009

நிகழ்(ச்)சுவை 27-12-2009

பொது

2009-ம் வருடத்தின் கடைசி ஞாயிறான இன்று டிவியில் கொஞ்சம் கிரிக்கெட், ஜாக்கி சானின் நியூ போலீஸ் ஸ்டோரி திரைப்படம், சூடான லஞ்ச், சுகமான மதிய தூக்கம் என்று இனிதாகவே கழிந்தது.. நேற்று டிசம்பர் 26 சில வருடங்களுக்கு முன்பு, மெரினாவில் சுனாமியிடம் தப்பித்து ஓடியது நினைவுக்கு வந்தது.. அந்த பாதிப்பை கவிதையாக்க முயன்றிருந்தேன்.. அது இங்கே..

தெலுங்கானா பிரிப்பது பற்றிய முடிவுக்கு வர மத்திய அரசுக்கு நாளைக்கு கெடுவாம்.. அந்த விஷயம் பற்றிய முழு வரலாறு தெரியாது.. எனினும் எந்த சேனலை மாற்றினாலும் தொடரும் வன்முறை, பற்றி எரிகிறது ஆந்திரா என்று ஒரே திகிலாகவே இருக்கிறது.. பிரித்துக் கொடுத்துவிட்டால் இது இந்தியா முழுக்க தொடர்கதையாகும் அபாயம் இருக்கிறது.. எது நடந்தாலும் பாதிக்கப்படப் போவதென்னவோ அப்பாவி மக்கள் தான்.. ஆர்பாட்டத்தாலும் வன்முறையாலும் இதுவரை நாசமான பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.250 கோடியாம்.. இந்த அழகில், ஆந்திர ஆளுநர் பெண்களுடன் உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டு இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்..

சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட், விசா எதுவுமின்றி "வித் அவுட்டில்" வந்த ஒருவரை பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.. சவுதி விமான நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியான இவர், எப்படியோ சக ஊழியர்களை சரிகட்டி விமானத்தின் டாய்லட்டில் ஒளிந்துகொண்டு பயணம் செய்திருக்கிறார்.. ஒரு படத்தில் பார்த்திபன் வடிவேலுவிடம், "நாங்கல்லாம் பிளைட்லேயே டிக்கட் எடுத்தது கிடையாது" என்று சொல்வாரே.. அது தான் நினைவுக்கு வந்தது..


சினிமா

ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் காணக் கிடைத்தது.. கண்டிப்பாக வித்தியாசமான முயற்சிதான் என்பதும், கொடுத்த டிக்கட் காசுக்கு பங்கம் வராது என்பதும் சில கிளிப்பிங்களிலேயே தெரிகிறது.. ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது கமலே சற்று அசந்து தான் போய்விட்டார்.. அந்த படபடப்பு அவரின் பேச்சிலேயே தெரிந்தது..
அதை யு-டியுப்'பில் தேடிப் பிடித்துப் பாருங்கள்..

இன்னும் அவதார் பார்க்கவில்லை.. சத்யமில் டிக்கட் கிடைக்காததால்.. இந்தப் படத்தை 3D யில் மட்டுமே பார்க்கணும் என்று நண்பர்கள் பலரும் சொல்லியிருக்காங்க.. அதான்..

அதுக்கப்புறம் பொங்கலுக்குத்தான் நெறைய படங்கள் வெளியாகிறது போல.. அதுவரை சன் டிவி சேனல்களில் விஜய்யும், மற்ற சேனல்களில் நகுலும், கால்மணிக்கொரு முறை வெற்றிநடை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்..


விளையாட்டு


இநதிய-இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று.. துவக்கம் முதலே இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மேட்ச், திடீரென்று ஆடுகளம் அபாயகரமாக இருக்கிறது என்ற காரணத்தால் பாதியிலேயே கைவிடப் பட்டது.. என்னக் கொடுமை சார் இது? வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியாவில் எல்லாம் முக்கால்வாசி பவுன்சி ட்ராக் தானே? அங்கேயும் நாலு அடிவாங்கிட்டு பிட்ச் சரியில்லை, அபாயகரமா இருக்குன்னு சொல்லிட முடியுமா?? ஆடத் தெரியாதவ கூடம் கோணல்'ன்னு சொன்ன கதையால்ல இருக்கு..


கவிதை

பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்கிறேன் நான்...

என்னை விழுந்து விடாமல்
பற்றிக் கொள்கிறது - உன்
நினைவுகள் என்னும் வேர்கள்...



**********
இப்போதைக்கு அவ்வளவு தாங்க.. பிடிச்சிருந்தா மறக்காம உங்கள் கருத்தையும், ஓட்டுகளையும் தந்துட்டுப் போங்க..

9 comments:

  1. //சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட், விசா எதுவுமின்றி "வித் அவுட்டில்" வந்த ஒருவரை பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.. //

    சவுதில கூட பண்ணிட்டாயங்களா??? என்னா தைரியம்??? வழக்கம்போல சைடுல வாங்ஙகிட்டு விசயத்தை அமுக்கிருப்பாயங்களே...

    அதான் இந்தியா சீரிஸ் ஜெயிச்சுடுச்சுல்ல... லங்கா பயலுகளும் வந்து ஒருமாசம் ஆச்சா சீக்கிரம் வீட்டுக்கு போனும்பாயிருப்பானுங்க... அதான் பவுன்சி பிச்சு மன்னாங்கட்டின்னு கதைவுடுறானுங்க..

    ReplyDelete
  2. //பொட்டல் வெளியில்
    ஒற்றைப் பனைமரம் போல்
    தனியே நிற்கிறேன் நான்...//

    நல்லாயிருக்கு....

    ReplyDelete
  3. சுனாமி கவிதை படிக்க இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.. நன்று..

    //பொட்டல் வெளியில்
    ஒற்றைப் பனைமரம் போல்
    தனியே நிற்கிறேன் நான்...//

    :)

    ReplyDelete
  4. நன்றி பிரதாப்.. அவன்கிட்ட ஒன்னும் தேறியிருந்திருக்காது.. அதான்.. :)

    நன்றி சங்(க்)கவி.. :)

    நன்றி சிவாஜி.. :)

    ReplyDelete
  5. நான் நேத்துதான் நண்பா சாந்தம்ல பார்த்தேன் .. சான்ஸ்சே இல்ல, முதலில் 3Dல பாருங்க அப்பறம் காமெடிக்கு தமிழ்ல பாருங்க..

    ReplyDelete
  6. எல்லாமே அருமை நண்பா, கவிதையையும் படித்தேன்.கஷ்டமாய் இருக்கு.ட்ரெய்லர் பார்க்க போகிறேன், அடிக்கடி எழுதுங்க.

    ReplyDelete
  7. //என்னை விழுந்து விடாமல்
    பற்றிக் கொள்கிறது - உன்
    நினைவுகள் என்னும் வேர்கள்//

    கவிதை அருமை மணிகண்டன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி ரோமியோ... கட்டாயம் பார்க்கிறேன்..

    நன்றி கார்த்திகேயன்.. :)

    நன்றி தேனம்மை மேடம்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நல்லாருக்கு மணி கண்டன் நீங்க தொகுத்து எழுதும் கதம்ப விஷயங்கள். தொடருங்கள்

    ReplyDelete