Thursday, October 6, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

-------------

மழையிரவின் பயணத்தில்
வாகன வெளிச்சம்
புரட்டிப் போடும் கிழிந்த கோணியை
அடிபட்ட நாயாயிருக்குமோ
என்றெண்ணும் நொடிப் பொழுதில்
பரிதாபத்தை வீழ்த்துகிறது
ஆழ்மன வக்கிரம்!

------------------

நீண்ட பெரும் யோசனைக்குப்
பின் தான் தீர்மானித்தேன்
இதற்கு
தலைப்பு என்று தனியாய்
ஏதும் தேவையில்லையென்று

----------------------

எங்கே தடம் மாறியது
தெரியவில்லை
தண்டவாள விளிம்பில்
வழுக்கியபடி
என்னுடன் பயணித்த
நிலவொளி

-----------------------------

நனையாதிருக்க நான் செய்த
பிரயத்தனங்களைக் காட்டிலும்
கவிதையாக்க முயன்றதில்
தான் இழந்தேன்
இன்னொரு மழையை


-------------------------

7 comments:

  1. நன்று!
    சந்திப்போம்,9th!

    ReplyDelete
  2. மணி மணியான கவிதைகள். முயற்சி தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. anbula manikandanuku

    ungalai parthathil magizhchi

    Tamizhil type panna kadinamaga than irukinrathi,

    Irunthalum ungalukaga, Ungal valai poo arumai

    nanum sernthu vitten indrumudhal

    Ennudaya valai poovai pidithiruntal ungalayum serka virumbukiren

    Jagan

    live-positive.blogspot.com

    ReplyDelete
  4. Thanks Prakash Anna!

    Thanks Jagan.. Had a good time! Thanks to Indiblogger's Team and TATA Grande! :))

    ReplyDelete
  5. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete