Saturday, August 1, 2009

எங்கே என் தேவதை???

தேவதைகளெல்லாம்
ஒன்று கூடி
என்னை சந்தித்தன
ஒரு நாள்...

என்னவென்று விசாரித்தேன்...

தேவதைகளின் உலகத்தில்
திருவிழாவாம்...
அதற்கு
தேவதைகளின் தலைவியான
நீ தலைமையேற்க வேண்டுமாம்...
என் அனுமதி தேவைப்படுகிறதாம்
உன்னை அழைத்துச் செல்ல...

எப்படி முடியும் என்னால்
உன்னைப் பிரிந்திருக்க???
அதனால்
முடியாதென்று சொல்லிவிட்டேன்
ஒருகணமும் யோசிக்காமல்...

கொஞ்சம் ஆடித்தான்
போய்விட்டன
அத்தனை தேவதைகளும்..

ஒரு சில கெஞ்சின..
ஒரு சில கொஞ்சின...
ஒரு சில அதட்டின..
ஒரு சில அழுதன...

தேவதைகள் அழுவதில்லை
என்ற கூற்றைப்
பொய்யாக்கிய சந்தோஷத்தில்
அவைகளிடம் நான் சொன்னேன்..

"உங்கள் உலகத்துக்கு
வேண்டுமானால் அவள்
தலைவியாய் இருக்கலாம்..
ஆனால்
என் உலகமே அவள் தான் என்று..."


நெகிழ்ந்து விட்ட
எல்லா தேவதைகளும்
மகிழ்வுடன் ஆசிர்வதித்தன..
நீ என் தேவதையாய்
எப்போதும் என்னுடன் இருக்க!!!

*******************************

5 comments:

  1. "உங்கள் உலகத்துக்கு
    வேண்டுமானால் அவள்
    தலைவியாய் இருக்கலாம்..
    ஆனால்
    என் உலகமே அவள் தான் என்று..."]]

    நீங்க ஹைலைட் செய்திருக்கும் இந்த பத்தி மிக அருமை.

    ReplyDelete
  2. நன்றி ஜமால்...

    ReplyDelete
  3. நல்லா இருக்கு மணி
    ஆனால் முன்னமே படித்தபோன்ற பீலிங்க்ஸ்
    வேற புதுசா ட்ரை பண்ணுங்க

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி பாலா..
    நிச்சயம் எழுத முயல்கிறேன்...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு கவிதை. நிறைய வாசியுங்கள். கவிதைகளிலும் காதல் தாண்டி எழுத முயலுங்கள். நம் வலையுலகிலேயே நிறைய பேர் மிக அழகாக எழுதுகிறார்கள். தேடிப் படியுங்கள்.

    All the best.

    அனுஜன்யா

    ReplyDelete