Wednesday, November 11, 2009

This Is It: ஒரு அற்புத அனுபவம்!நான் ஒன்றும் மைக்கேல் ஜாக்சனின் ரசிகன் கிடையாது. அவரைத் திரையில் பார்த்ததும் மைக்க்க்க்கே......ல்ல்ல்ல் என்று அலறுபவனில்லை நான். அவரது பாடல்களின் (புரியப் போவதுமில்லை என்பது வேறு விஷயம்) அடிமை கிடையாது. ஆனால் அவரின் மறைவுக்குப் பின் வந்த, வந்துகொண்டிருக்கிற செய்திகளை அவ்வபோது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு, சமீபத்தில் வெளியான This Is It திரைப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இன்று தான் அமைந்தது.

மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தனது அடுத்த இசைச் சுற்றுப்பயணமான This Is It -க்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்வதையும், அதில் பங்குபெறும் மற்ற கலைஞர்களின் பேட்டிகளையும் மட்டுமே தொகுத்து வெளியாயிருக்கும் டாகுமெண்டரி படம் தான் This Is It.

சும்மா சொல்லக் கூடாது. அந்த மனிதரின் பெயரும் முகமும் திரையில் தெரியும்போது நம்மவர்களே போட்ட ஆனந்தக் கூச்சல் இருக்கிறதே.. எனக்கும் கொஞ்சம் சிலிர்த்துப் போய் விட்டது. ஐம்பது வயதென்று நம்ப முடியாத தோற்றமும் அவரின் நடன அசைவுகளும்... வாவ்... முக்கால் செகண்டுக்குள் அவரின் அங்கங்கள் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அனாயாசமாய் அசையும் அழகு இருக்கிறதே.. இப்போதுதான் தெரிகிறது... அவர் ஏன் உலகளாவிய ரசிகர்களை இந்தளவு கவர்ந்திருக்கிறார் என்று...

ஆனால் அவர் இறந்ததும், அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார், எலும்பும் தோலுமாய் இருந்தார், நடக்க முடியாமல் அவதிப்பட்டார் என்று எத்தனை செய்திகள். அத்தனையும் பொய்யென்று நிரூபிக்கிறது அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடன அசைவுகள். சக கலைஞர்களெல்லாம் 20-25 வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தான் அவருடன் ஈடுகொடுத்து ஆட முயன்று கொண்டிருந்தார்கள் என்றே கருதுகிறேன் நான்.

சத்தியமாய் அவரின் எந்த ஆல்பத்தையும் நான் இதற்குமுன் பார்த்திருக்காவிடினும், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக அத்தனையும் ஒருசேரப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது. அவரின் ""Love Lives Forever"" என்ற வாசகத்துடன் நிறைவு பெறுகிறது படம்.

மைக்கேல் ஜாக்சனின் இந்த இசைக் காவியத்தைப் பார்க்க அடிப்படைத் தேவைகளாக நான் உணர்ந்தது இதைத்தான்...

அவரின் ரசிகனாக இருத்தல்??
குறைந்த பட்சம் அவரின் பாடல்களைப் பற்றிய முன்னறிவு??
மேற்கத்திய இசையின் மீது நாட்டம்???

ஒரு மண்ணும் இல்லை...!!!

இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.

15 comments:

 1. Super vimarsanam. I also want to see this movie.

  ReplyDelete
 2. //இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.//

  Soo true .. Super..

  ReplyDelete
 3. Well-written..!! Same with me, somehow this guy has caught a little space in all our hearts after his demise! Anyways, his songs are going to be forever!

  // புரியப் போவதுமில்லை என்பது வேறு விஷயம்//
  So trueee!!!

  ReplyDelete
 4. நன்றி ப்ளாக்-பாண்டி!!!
  நன்றி கார்த்திகேயன்!!!
  நன்றி ரோஹிணி!!!

  ReplyDelete
 5. தம்பி நான் இன்னும் இந்த அவணபடத்தை பார்க்கலை.. நீ சொன்னது வச்சி பார்க்கும் போது நிச்சய்ம நல்லா இருக்கும்னு நினைக்கின்றன்...

  நல்லா எழுதி இருக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. dai.. i have seen many people saying the same thing wrote here.. but i agree wid u.. he is simply the great and Entertainer of the millennium !!!

  ReplyDelete
 7. நன்றிகள் ஜாக்கி அண்ணா...
  நன்றி அஹோரி..
  நன்றி செந்தில்...

  ReplyDelete
 8. //இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.//

  நல்லதொரு புகழ்மாலை

  ReplyDelete
 9. எனக்கு மைக்கேல் ஜாக்சன் இசை கற்பூர வாசனை!

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 10. நன்றி சுரேஷ்...
  நன்றி ஜவஹர் சார்.. உங்கள் பதிவுகளை போலவே, பின்னூட்டங்களிலும் ஹாஸ்யம்.. :)

  ReplyDelete
 11. இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக்கொள்வார். //
  ரொம்ப சரியா சொன்னீங்க மணிகண்டன்.

  ReplyDelete
 12. நல்லாயிருக்கு மணிகண்டன்

  ReplyDelete