Sunday, November 29, 2009

மொட்டை – சிறுகதை

waitingகாலை 8.20 மணி...

சென்னையின் மையப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலை, பலதரப்பட்ட மக்களின் காலைநேர அவசரங்களுக்கு ஈடுகொடுக்கத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது.. பள்ளி, கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விரைந்து கொண்டிருப்போரைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இன்னும் சற்றுநேரத்தில் வரவிருக்கும் பேருந்திற்காக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தன் பைக்கில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறான் மொட்டை.

மொட்டை??? அதுவல்ல அவன் பெயர்.. ஆனால் அதுபற்றி உங்களுக்கென்ன?? அம்மு அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்... அம்மு... அவளைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது... ஏனெனில், யாரும் அவளைப்பற்றி பேசுவதை மொட்டை விரும்ப மாட்டான்.. எனவே, சுருக்கமாய் சொல்வதென்றால் அவள் ஒரு தேவதை... அவ்வளவுதான்..

ஆம் உங்கள் அனுமானம் சரி தான்.. அம்மு வரப்போகும் பேருந்திற்காகத் தான் மொட்டை காத்திருக்கிறான்... எதற்காகவா? சரி சரி.. பேருந்து வருவதற்குள் சட்டென விஷயத்தை சொல்லிவிடுகிறேன்..

அம்முவும் மொட்டையும் ஒரே நிறுவனத்தில் தான் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.. துவக்கத்தில் நட்பில் ஆரம்பித்த நெருக்கம் ஒரு கட்டத்தில் மொட்டையை காதல் என்ற கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.. எவ்வளவோ போராடி மறைக்க முயன்றும் முடியவில்லை.. எனவே, அம்முவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டான். அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும்.. என்றாலும், யோசித்துச் சொல்வதாய் சொல்லியிருக்கிறாள். அம்மு சொல்லப் போகும் பதிலுக்காக அதிகாலையிலே எழுந்து, குளித்து, கோவிலுக்கெல்லாம் போய் வந்து, இப்போது இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்துக்கொண்டிருக்கிறான் மொட்டை. ஆம்.. அவள் இங்கு தான் இறங்குவாள்..

அதோ.. தூரத்தில் வாகன நெரிசலுக்கிடையே பேருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது... வந்ததும் அம்மு என்ன சொல்லப் போகிறாளோ என்ற ஆவலுடன் எழுந்தவனை தோளில் தட்டியது ஒரு கை...

"என்னடா.. கிளம்பலாமா???".... ஏடிஎம்-மின்னின்றும் வெளிப்பட்ட மொட்டையின் நண்பன் ரகு கேட்டான்...

ஒருகணம் திகைத்து, பின், நினைவுகளிலிருந்து மீண்ட மொட்டையை கவனித்த ரகு...

"டேய்... இன்னும் அவளையே நினைச்சிட்டிருக்கியா??? அவ தான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் ரெண்டு வருஷமாச்சே.. விட்டுத் தள்ளேண்டா" என்றபடி பைக்கை உயிர்ப்பித்தான்.

ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தபடி பைக்கின் பின்னாலமர்ந்த மொட்டையால், அம்மு ஏன் பதிலே சொல்லாமல் போய்விட்டாள் என்ற கேள்வியை மட்டும் விட்டுத் தள்ளவே முடியவில்லை..

14 comments:

  1. ஆமாங்க மணி. அநியாயம் பண்ணிட்டா அம்மு :)-

    இப்படிக்கு
    அந்த பஸ் ஸ்டாப்பில் மட்டும் அம்முவை நினைக்கும் மொட்டை.

    ReplyDelete
  2. //அந்த பஸ் ஸ்டாப்பில் மட்டும் அம்முவை நினைக்கும் மொட்டை//
    ஓஹோ... அப்படியா விஷயம்??? :)

    ReplyDelete
  3. நன்றிங்க ராமலக்ஷ்மி... :)

    ReplyDelete
  4. Twist in the tale at the end is super. Nalla yeludhareenga.. eager to see more from you. :)

    ReplyDelete
  5. Hmm..Kalakunga! Romba nalla iruku, oru mensogathoda! Have you considered sending these to some magazines? Just a suggestion! Good luck.. :)

    ReplyDelete
  6. நல்லாயிருக்குங்க. பாவம் மொட்டை. அம்மு, அவனுக்கு மொட்டை போட்டதால் அந்த பெயரா இல்லை மொட்டை போடப்போறோம்னு தெரிஞ்சு அந்தப் பெயர் வெச்சாங்களான்னு தெரியலை.

    ReplyDelete
  7. நல்ல திருப்பம். ஆனால் கதையின் முதலே நீங்க ஒரு குலு குடுத்துடிங்க பாஸ் .

    ""அம்முவும் மொட்டையும் ஒரே நிறுவனத்தில் தான் பணி புரிந்து கொண்டிருந்தார்கள் ""


    இந்த வரி படிச்சா போது ஏதோ ஒண்ணு நடந்து இருக்குன்னு தோணுது.

    ReplyDelete
  8. நன்றி நித்யா...
    நன்றி ரோஹிணி... விரைவில் செய்கிறேன்...
    நன்றி பின்னோக்கி..
    நன்றி ரோமியோ.. :)

    ReplyDelete
  9. Romba nalla iruku machi..
    short storyku nalla line .. gud luck da

    ReplyDelete
  10. பெயர்கள் எல்லாம் ரொம்பவே கேள்விப்பட்டதாக இருக்கின்றன! அம்மு, மொட்டை...

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  11. நன்றிடா செந்தில்..
    ஜவஹர் சார்.. அப்படியா சொல்றீங்க???.. :)

    ReplyDelete
  12. வித்தியாசமா இருக்கு.
    நல்லாருக்குங்க மணிகண்டன்.

    ReplyDelete