Friday, December 4, 2009

நிகழ்(ச்)சுவை 04-12-2009

என் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துபரோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே.. படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்...


*****************
பதிவுலகம்
வேறெதைப்பற்றி சொல்ல முடியும்..?? சக பதிவர் நர்சிம்'மின் படைப்புகளின் முதல் தொகுப்பாக "அய்யனார் கம்மா" என்ற புத்தகம் வெளிவரவிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதுகுறித்த பதிவுகளின் சுட்டி இங்கே. நேரில் சென்று வாழ்த்தி அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம் என்றிருக்கிறேன்.
அது ஒருபுறமிருந்தாலும் Congrats Narsim...!


********************
விளையாட்டு
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய-இலங்கை டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் அட்டகாசமான அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார் வழக்கம் போல. வெற்றிகரமாய் 300'ஐத் தாண்டி லாராவின் சாதனையை தகர்ப்பார் என்று நம்பியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக 293'ல் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா... இலங்கை அணியினர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். ஒரே நாளில், 40x4, 7x6 உடன் 284 ரன்கள். Unbelievable!!!... மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அடைந்திருக்கும் குதூகலத்தை உணர முடிகிறது. மற்றொரு விஷயம், தமிழக வீரர் முரளி விஜயின் நேர்த்தியான துவக்க ஆட்டம். Well Done Vijay!!!... மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரின் அரைசதங்களால் இப்போதைக்கு இந்த மேட்ச் இந்தியாவின் வசம் இருக்கிறது.. பார்ப்போம்..


*********************
சினிமா
இன்னைக்கு ஆதவனின் ஐம்பதாவது நாள் போஸ்டரைப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஏம்பா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

தற்போதைக்கு பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியிருக்கும் படம் ரேனிகுண்டா. கேபிளாரின் விமர்சனத்திற்காக வெயிட்டிங்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசைவெளியீடு லண்டனில் நடைபெறவிருக்கிறதாம். நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


*************
பொது

வேதாரண்யம் பள்ளிக்குழந்தைகளின் வேன் விபத்து சோகத்துக்குள்ளாக்கியது. வேன் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் பழக்கமுடையவராம். இவனுங்கள என்னத்த சொல்றது???

"குடி"மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. டாஸ்மாக்'கிலேயே திருட்டுத் தனமாக சரக்கில் தண்ணீர் கலந்து விற்கிறார்களாம். அதான் நம்ம ஆளுங்க எவ்ளோ அடிச்சாலும் கிக்கே இல்லையேன்னு புலம்புறாங்களோ???

இருக்கிற செல்போன் சேவை பத்தாதுன்னு "யுனினோர்" என்று ஒருத்தன் வந்திருக்கான். எல்லா சிக்னல் கம்பங்களிலும் இவன் விளம்பர போர்டை வைத்திருக்கிறான். பார்க்கலாம்.. மக்களை மடையர்களாக்க இவன் என்ன பிளான் வைத்திருக்கிறான் என்று..


*****************
கவிதை (இது என்னுடையது தான்)

கவிதை கேட்கிறாய் நீ...

உன்னைப் பற்றி யோசிக்கவே
நேரம் போதவில்லை எனக்கு...
பின் எப்படி யோசிப்பேன்
கவிதைக்கான வார்த்தைகளை???

எதையாவது கிறுக்கி அனுப்புகிறேன்...
உன் பார்வை பட்டால் என்
கிறுக்கல்களுக்கும் கிடைத்துவிடும்
"கவிதை" எனும் பட்டம்!!!

13 comments:

  1. என் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துபரோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே..

    நான்வெஜ் இல்லயா?

    ReplyDelete
  2. நல்ல கலவை. வாரம் தோறும் இதே போன்று எழுதவும் .

    ReplyDelete
  3. விரைவில் தர முயல்கிறேன் பிஸ்கோத்து... :)

    நன்றி அனுஜன்யா...

    நன்றி ரோமியோ..

    ReplyDelete
  4. //கவிதை (இது என்னுடையது தான்)//நம்பிட்டேன்
    :-)

    கவிதை அழகு...

    ReplyDelete
  5. / நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் / Very true!!!

    Kavithai romba azhagu!! Anubavichu ezhuthareenga polarku!! ;) Keep the good work going!

    ReplyDelete
  6. நன்றி பிரியா... (நம்புங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை..) :)

    நன்றி ரோஹிணி... தொடர் ஊக்குவிப்புக்கு..

    ReplyDelete
  7. ***
    கவிதை கேட்கிறாய் நீ...
    ***

    யார் அது ? அதை இப்ப சொல்லுங்க. நாங்க பார்த்துக்கொள்கிறோம் :)-

    நைஸ் mix. keep it up

    ReplyDelete
  8. விடுங்க மணி.. உங்க கஷ்டம் எனக்கு புரியுது... but what to do??? :)

    ReplyDelete
  9. ஆங் ரைய்டு... மணி

    ReplyDelete
  10. இந்த தடவையும் நான்தான் அவுட்டா? ( லேட்டா வந்ததுக்கு சொன்னேன் )
    நிகழ்சுவை மிகச்சுவை ! தொடர்ந்து கலக்குங்க நண்பா !

    ReplyDelete
  11. லேட்டா வந்தாலும் நீங்க லேட்டஸ்ட் ஜெனோவா... நன்றி.. வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!

    ReplyDelete