Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010

2010
இன்னும் சில மணி நேரங்களில் கடந்து செல்லவிருக்கும் 2009-ம் ஆண்டு, எனக்கு அதிக மகிழ்ச்சிகளையும், நல்ல புதிய நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.. நெருக்கடியான உலக பொருளாதார சரிவின்போதும் எனக்கு ஊதிய உயர்வு (எதிர்பார்த்தது இல்லன்னாலும் கொடுத்தாங்க பாருங்க), பணியில் நிறைய புதுவிஷயங்கள் கத்துக்கற வாய்ப்பு, ஒருவழியா நானும் பதிவெழுதத் துவங்கியது, பல புதிய பதிவுகள்/பதிவர்கள் அறிமுகம் மற்றும் நட்பு, அப்படின்னு ரொம்ப நல்லாவே போச்சுங்க இந்த வருஷம்..

என்னது..? வருத்தப்படற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா'வா? நீங்க வேற... அதுவும் கொஞ்சம் இருந்தது.. ஆனால், புது வருஷத்தை வரவேற்கத் தயாராகும் இந்த இனிமையான நேரத்தில் அதெல்லாம் எதுக்கு?? சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்லும் "நல்லதை மட்டும் எடுத்துக்கங்க.. கெட்டதை அப்படியே விட்டுடுங்க" பாலிசி தான்...

எல்லா வருடமும், இன்னும் தொடர்பிலிருக்கும் என் பள்ளி நண்பர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் தான் பீச், பார்ட்டி என்று புதுவருடத்தைக் கொண்டாடுவேன்.. ஆனால், இந்த வருடம், வீடு மாறிவிட்டதாலும், நண்பர்கள் அனைவரும், வேலைநிமித்தமாய் வெளியூரில் இருப்பதாலும், ஆர்பாட்டம் ஏதுமில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன்.. புதுவருடப் பிறப்பை நோக்கி... Really Missing You Guys!!!

பிறக்கப் போகும் 2010-ம் ஆண்டும் இறைவனின் அருளால் பல மகிழ்ச்சியான விஷயங்களை அள்ளித்தரும் என்று நம்புகிறேன்.. பார்ப்போம்..

ஓகே.. உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. ஸ்டார்ட் மியூசீக்க்க்க்க்க்....

15 comments:

  1. அப்படி மறக்க முடியுமா Brother
    anyway
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தர்ஷன்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மணி.

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மணி,

    புதிய ஆண்டில் நிறைய சாதிக்க வாழ்த்துகள். நிறைய வாசியுங்கள். அட்டகாசமாக எழுதுங்கள். All the best.

    அனுஜன்யா

    ReplyDelete
  6. அருமையான எண்ணம்,
    நல்ல பதிவு
    உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி சிவாஜி சங்கர்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..


    நன்றி மணி.. விஷ் யு தி சேம்... :)


    நன்றி துபாய் ராஜா.. என் உளமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும்..


    நன்றி மஸ்தான்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்..


    நன்றி அனுஜன்யா.. உங்கள் வாழ்த்தும் ஆசியும் என்னை இன்னும் மகிழ்விக்கிறது..


    நன்றி கார்த்திகேயன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. புத்தாண்டு இனிதாக அமைய வாழ்த்துக்கள் மணிகண்டன்

    ReplyDelete
  9. நன்றி பிரதாப்.. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லுறேன் மணிகண்டன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  13. நன்றி ப்ரியா.. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நன்றி தேனம்மை மேடம்.. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete