நேற்று இரவு முதலே பல பதிவுகளில் (நெகடிவ்வாக) விமர்சனங்கள் வரத்தொடங்கினாலும், விஜய், அனுஷ்கா, சன் டிவி, ஏவிஎம், நண்பர் நடிகர் சத்யன், துள்ள வைக்கும் பாடல்களால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் இன்னபிற காரணங்களால் டிக்கெட் முன்பதிவு செய்து இன்று அம்பத்தூர் ராக்கியில் பகல் காட்சி போயிருந்தேன்.. உண்மையிலேயே விஜய் செம மாஸ்'ப்பா..
அதே வழக்கமான, ஏதோ ஒரு லட்சியத்துடன் வரும் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லனை எதிர்த்து போராடி, நடுநடுவே, ஹீரோயினுடன் காதல், காமெடி என்று கலந்து கட்டி, இறுதியில் வெற்றிபெறும் தமிழ் சினிமாவுக்கே உரித்தான அரதப் பழசான கதை. ஆனால்.. லாஜிக் சற்றுமில்லாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் பிசிறடிக்கிறது படம்.. முதல்பாதி ஓரளவுக்கு கலகலப்பாய் நகர்ந்தாலும் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டதைப் போன்றதையொத்த காட்சிகள் என்பதால் சலிப்பே மிஞ்சுகிறது..
விஜய்யை பொறுத்தவரை, தன் பங்களிப்பை சரியாய் செய்திருக்கிறார்.. காமெடி மற்றும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்'களில் கவனம் செலுத்தும் இவர், கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.. நீர் வீழ்ச்சியிலிருந்து குதிப்பது, காரோடு பறப்பது, அடிக்கும் போது எதிரிகள் பலமைல் தள்ளிப் போய் விழுவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் ஏன் சார் ஒத்துக்கறீங்க?? (படத்தின் ஆரம்பத்தில் கும்மாளமாய் ஆட்டம் போட்ட விஜய்யின் தீவிர ரசிகர்களே கூட இதுபோன்ற காட்சிகளால் நொந்துபோய் கமெண்ட்ஸ் அடித்ததைக் காண முடிந்தது..)
அனுஷ்கா சில/பல காட்சிகளில் விஜய்யை விட பெரியவராக/உயரமாகத் தெரிகிறார். அருந்ததி அளவுக்கு இத்திரைப்படத்தில் நம்மை ஈர்க்கவில்லை என்பதே உண்மை..
சத்யன், ஸ்ரீநாத், ஷாயாஜி போன்றோர் சிரிக்கவைக்க முயல்கின்றனர்.. ரொம்ப படங்களுக்குப் பின் நண்பர் சத்யனுக்கு நிறைய காட்சிகளில் வரும் வாய்ப்பு..
சாய்குமார், சலீம் கௌஸ், இன்னொரு தெலுங்கு பட வில்லன்.. இவர்களின் பாத்திரப் படைப்பு கர்மம்'டா சாமி.. அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வருபவர் மட்டும் (அவரும் தெலுங்காம்) கொஞ்சம் ஓகே.. சுகுமாரி, டெல்லி கணேஷ், கொச்சின் ஹனீபா ஆகியோரும் இருக்கிறார்கள்..
மற்றபடி, எடிட்டிங், இசை, நடனம், கலையலங்காரம், ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களும் அந்தளவுக்கு கதைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் அடுத்த விஷயம்..
மொத்தத்தில் ஒரு திரைப்படத்தை ஹிட்'ஆக மாற்றக்கூடிய சில அம்சங்கள் இதில் மிஸ்ஸிங் என்றாலும் சன் டிவி என்ற பிரம்மாண்டம் துணையிருக்கிறது.. பார்ப்போம்..
எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...
எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...
அப்படியே கைய கொடுங்க... ஒரு முத்தம் வைக்கணும். என்னோட டிக்கட் காசை சேமிக்க வைத்தமைக்கு நன்றி ;)
ReplyDeleteஇந்த விஜய் இனி உருப்பட வாய்ப்பில்லை...
//Better Luck Next Time Vijay...//
ReplyDeleteBut Bad luck this time for u Mani.
@ மயூரேசன்:
ReplyDeleteஎன்ன அப்படி சொல்லிட்டீங்க? நல்ல கதைக்களம் அமைந்தால் வெற்றி நிச்சயம்..
@துபாய் ராஜா:
:)
எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் //
ReplyDeleteதனது ரசிகர்களுக்கு கூட பிடிக்காத ஒரு படத்தில் தான் நடிக்கணுமானு விஜய் கண்டிப்பா யோசிக்கணும். இந்த முறை அதிகபட்ச விமர்சனத்துக்கு அவரது அரசியல் ஆசை கூட காரணமாய் இருக்கலாம். அப்பாவின் தலையீடை ஒதுக்கணும். யாராவ்து சொல்லுங்கப்பா.
உங்கள யாருங்க ரிஸ்க் எடுத்து இந்த படத்த பாக்கசொன்னது ???!!!
ReplyDelete@ நாய்க்குட்டி:
ReplyDeleteபடம் நடிக்கறதுல இல்லீங்க பிரச்சினை.. தனக்கேத்த நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் தான்.. இது விஜய்க்கு மட்டுமல்ல.. எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.. :)
@ ரசிக்கும் சீமாட்டி:
ரிஸ்க் எடுக்கறது எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. அவ்வவ்வ்வ்வ்..... :)
பரவாயில்லையே, எல்லா நெகடிவ் கமென்ட்ஸையும் தாண்டி ரொம்ப தைரியமா படம் பார்த்திருக்கீங்க... நல்லாவும் விமர்சனம் பண்ணியிருக்கீங்க!
ReplyDelete//எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...//
I agree with you!
நன்றி ப்ரியா.. :)
ReplyDeleteதல நீங்களுமா..
ReplyDeleteஹாய் மணி,
ReplyDeleteநல்ல விமர்சனம்!
இந்த மாதிரி படத்துக்கெல்லாம் மார்கெட்டிங் பண்ணியே சன் டிவியும் "காமெடி piece"-அ ஆயிடும், இன்னும் கொஞ்ச நாள்ல!!
நன்றி,
Yuva
@ சிவாஜி:
ReplyDeleteஹி.. ஹி.. ஆமாங்க.. நானும் தான்.. :)
@ யுவா:
நன்றிங்க.. ஆமா.. எனக்கும் அப்படித் தான் தோணுது..
விமர்சனம் நல்லாயிருக்கு நண்பா,ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteநன்றி கார்த்திகேயன்... :)
ReplyDelete//இசை, நடனம், கலையலங்காரம், ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களும் அந்தளவுக்கு கதைக்கு ஒத்துழைக்கவில்லை//
ReplyDeleteபாட்டுலாம் நல்லாதாங்க இருக்கு, இந்த படத்துக்கு விஜய் ஆண்டனிதான் ஒரே ப்ள்ஸ்!
வருகைக்கு நன்றி குறும்பன்..
ReplyDeleteதுள்ள வைக்கும் பாடல்கள் அப்படி'ன்னு முதல் பத்தியிலேயே சொல்லியிருக்கேனே.. கீழே சொல்லியிருகிறது பின்னணி இசையைப் பற்றி.. கரெக்ட் தானே?
நல்லாயிருக்கு
ReplyDeleteநன்றி T.V.R.. :)
ReplyDeleteஒரு flopukum அடுத்த flopukum கொஞ்சம் இடைவெளி கொண்டுங்க Dr. விஜய்.. Sun Tv வங்களன .. கேவலமா போயிருக்கும் போலருக்கே..!!!
ReplyDeleteshaaaabhhhhhaaaaa .. Trailera பாத்தாலே கண்ணா கட்டுதே.. நீ எப்பிடி மணி full படம்??.. நீ எவொலோ அடிச்சாலும் தாங்குவ.. u hav proved.. :)
btw.. fine review..!!!
விமர்சனம் சூப்பர்...
ReplyDeleteஎன்னடா இவ்வளவு லேட்டா விமர்சனத்தை படிச்சுட்டு பின்னூட்டம் போடுறானேன்னு நினைக்காதீங்க? நான் எப்பவுமே அப்படித்தான்.
//Better Luck Next time//
உங்க நேர்மைஎனக்கு புடிச்சிருக்கு..ஐ லைக் இட்:-)
தேங்க்ஸ் செந்தில்..
ReplyDeleteநன்றி பிரதாப்.. :)
இளய தளபதி ரசிகரா நீங்க
ReplyDeleteநல்லாருக்கு மணிகண்டன்
பிடிச்ச நடிகர் என்பதற்காக பூசி மெழுகாமல் உண்மையை எழுதுனதுக்கு
@ தென்னம்மை:
ReplyDeleteநான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன்'ங்க தென்னம்மை மேடம்..
ஆனால் விஜய், அஜித், சூர்யா எல்லாரையும் பிடிக்கும்..
@ ராம்
நன்றி ராம்.. :)