Sunday, November 8, 2009

பாழாய்ப் போன "காதல்" கவிதைகள்


நான் காணும் அனைத்தும்
ஏதாவது ஒருவகையில்
உன்னை நினைவூட்டுகின்றன

உன்னை நினைவூட்டும் வகையில்
ஏதாவது இருக்காதா என்ற
தேடலுடன் மட்டுமே
அனைத்தையும் காண்கிறேன்
நான்!!!


**********************************

மருத்துவமனை சென்றிருந்தேன்...

என் ரத்தம் பரிசோதித்த பின்
மருத்துவன் சொன்னான்..
இது ஏதோ புது வகையைச்
சேர்ந்ததென்று..
மருத்துவ உலகின் அதிசயமாய்
இருக்கக் கூடுமென்று...

இன்னும் ஏதேதோ புலம்பினான்
பைத்தியக்காரன்..

பாவம்.. அவனுக்கெப்படித் தெரியும்???
என் ரத்த அணுக்கள்
எப்போதோ உன் பெயருக்கு
மாறிவிட்ட விஷயம்!!!

***************************************

எல்லா மொழிகளிலும்
தேடி விட்டேன்...

நீ உதடு சுழிப்பதற்கு
இணையான கவிதையை
வரைவதற்கு வார்த்தைகளே
இல்லை....

24 comments:

  1. நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா!

    ReplyDelete
  2. nanba thangal eannoda blogyum inaikka virumbukireyn!

    mirthonprabhu.blogspot.com

    nandri!

    ReplyDelete
  3. நன்றி மிர்த்தன் பிரபு

    ReplyDelete
  4. கவித கவித சூப்பரு

    ReplyDelete
  5. நன்றி நித்யா..
    நன்றி சரவணா..
    நன்றி பிஸ்கோத்து..

    ReplyDelete
  6. அழகான கவிதைகள்! ஆமா அது என்ன "பாழாய் போன.." ?? நல்லா தானே இருக்கு! :)

    ReplyDelete
  7. நன்றி ரோஹிணி... நல்லா இருந்தா சரி!! :)

    ReplyDelete
  8. //எல்லா மொழிகளிலும்
    தேடி விட்டேன்...

    நீ உதடு சுழிப்பதற்கு
    இணையான கவிதையை
    வரைவதற்கு வார்த்தைகளே
    இல்லை....//

    அனுபவித்து எழுதா விட்டால் இது மாதிரி வராது. பாராட்டுவதா பொறாமைப்படுவதா?

    ReplyDelete
  9. எல்லா மொழிகளிலும்
    தேடி விட்டேன்...

    நீ உதடு சுழிப்பதற்கு
    இணையான கவிதையை
    வரைவதற்கு வார்த்தைகளே
    இல்லை....//

    அடேங்க‌ப்பா...

    ஆமா அந்த‌ புள்ளைக்கி தெரியுமா....???

    ReplyDelete
  10. நன்றி ஜவஹர்..
    ஏன் மணி???.. :)
    வாங்க கருணாகரசு... அந்த புள்ளைக்கி தெரிஞ்சி போய் ஒரேயடியா சுழிச்சிபுடிச்சி... :)

    ReplyDelete
  11. நீ உதடு சுழிப்பதற்கு
    இணையான கவிதையை
    வரைவதற்கு வார்த்தைகளே
    இல்லை....--//

    இந்த வரியில பின்னிட்ட போடா

    ReplyDelete
  12. நன்றிங்க அசோக்..
    நன்றி ஜாக்கி அண்ணே.. :)

    ReplyDelete
  13. அழகான காதல் கவிதைகள்... "பாழாய்ப் போன"... எதற்கு???

    ReplyDelete
  14. நன்றி ப்ரியா..! பயன்படாதது எதுவுமே பாழாய்ப் போனது தானே?? :)

    ReplyDelete
  15. super da.. especially the final one..

    ReplyDelete
  16. கடைசி கவிதை நல்லாருக்கு.

    ReplyDelete
  17. பாழாய் போனப்பின்பும் "காதல்" கவிதைகள் !!!(எனக்கு )

    அருமை நண்பா , கடைசி ஒன்னு பின்னிடீங்க !!

    ReplyDelete
  18. நன்றி விக்னேஷ்வரி!!
    நன்றி ஜெனோவா, உங்களுக்குமா?!?.. :)

    ReplyDelete
  19. கடைசி ரொம்ப புடிச்சுருந்துச்சுங்க

    ReplyDelete