இப்ப தாங்க.. ஜெகன் போன் பண்ணினான். விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தமா போச்சு.. விஷயம் இதுதான்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களை போலீஸார் விரட்டிவிட்டார்கள். நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக இவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்த நடவடிக்கை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோர் டென்னிஸ் பந்துகளையே பயன்படுத்துகிறோம். எனவே யாருக்கும் அடிபட்டு, காயம் ஏற்பட வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்தவரை நடைப்பயிற்சி செய்வோரே சற்று நேரம் நின்று இந்த கிரிக்கெட்டை ஆர்வமுடன் பார்த்துவிட்டுப் போவார்களே தவிர, இத்தனை ஆண்டுகளாக எந்த நடைப்பயிற்சி அமைப்புகளும் இதுபோன்று புகாரெல்லாம் தந்ததில்லை.
-----------------
சனி ஞாயிறுகளில், பட்டினம்பாக்கம் தொடங்கி அண்ணா நீச்சல் குளம் வரை, தங்களைத் தானே சச்சினாகவும், பிரெட் லீயாகவும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் கிரிக்கெட் விளையாடும் 2000-3000 பேர்களில் நானும் ஒருவன்.
சனிக்கிழமை இரவே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். நாளை எதிர்த்து ஆடப் போகும் அணியின் ஜாதகம் அலசப்படும். சென்றமுறை அவர்களிடம் கேவலமாய் தோற்றது நினைவில் நாட்டியமாடும். "மச்சான், இந்தமுறை(யாவது) ஜெயிச்சுடனும்டா" ஒருவருக்கொருவர் உறுதிமொழி எல்லாம் பின்னி பெடலெடுக்கும். தூங்கப் போனால், கனவில் கூட, போன மேட்ச் வாங்கிய உதை வந்து இம்சை பண்ணும்.
ஞாயிறு விடிந்ததும் அணியைத் திரட்டிக் கொண்டு (இது ஒரு பெரிய கலை)... பீச்சுக்கு போய் பிட்ச் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துடும். ஒரு வழியாய் எதிரணி வந்து டாஸ் போட்டு, முந்தைய நாளிரவில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும், நாங்கள் இந்த (சப்பை) அணியை வென்று எங்கள் மனக்காயத்துக்கு தற்காலிக மருந்து போட்டுக்கொள்வோம். ஒருவேளை தோற்றுவிட்டால்.. "விடு மச்சான். நேத்து இந்தியாவே தோத்துடுச்சு"னு மொக்கையாய் ஆறுதலும் சொல்லிக் கொள்வதுண்டு.
"அவன் தான் ஆப்-சைடு'ல அடிக்கறான்னு தெரியுதுல்ல, லெக்-சைடு'ல போடுடா..." "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா" போன்ற, சென்னை-28 என்ற திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமான அனைத்து அம்சங்களின் பிறப்பிடமே இந்த மெரீனா தான்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, வயது வித்தியாசமில்லாமல் எத்தனை அணிகள், எத்தனை நண்பர்கள், எத்தனை அனுபவங்கள்... இதைப்பற்றி எழுதவே தனி பதிவு தேவைப்படும்... So.. coming back to the issue...
ஏற்கனவே ஞாயிறு மதியங்களில் மெரீனாவில் பார்க்கிங் காரணமாய் கிரிக்கெட் விளையாட முடியாது. நாங்கள் விளையாடுவதே ஞாயிறு காலை முதல் மதியம் வரையிலான ஐந்து மணிநேரங்கள் தான். இதிலும் பல ஞாயிறுகளில், விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்கள், மாரத்தான் ஓட்டங்கள், என்று எங்கள் கிரிக்கெட் ஆட்டங்கள் தடைபட்டுப் போவதுண்டு.
மேலும், சென்னையில் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் பொதுமக்கள் விளையாட அனுமதிக்கப் படுவதில்லை. மாநகராட்சி மைதானங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மழை வேறு ஆரம்பித்துவிட்டதால் இருக்கும் ஒன்றிரண்டு மைதானங்களும் சகதியாய் நிரம்பி ஈஈஈஈ'யென்று இளித்துக் கொண்டிருக்கும்.
எனவே, மெரீனாவில் இனி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற காவல்துறையின் இந்த அறிவிப்பு, அங்கு கிரிக்கெட் விளையாடிய, விளையாடுகிற, விளையாடப் போகிற எவருக்குமே அதிர்ச்சியாய்த் தான் இருக்கும்..
---
ஒரு நிமிஷம் இருங்க.. போன்..
"மணி.. சீனா பேசறேன்டா"
"சொல்லு சீனா"
"இந்த வாரத்திலிருந்து பீச்'ல விளையாடக் கூடாதாமேடா... அப்போ எங்க போய் விளையாடறது??"
"ஒன் செகண்ட் மச்சி.."
---
சரிங்க... இப்போ நாங்க லோக்கலில் இருக்குற மைதானங்களோட கண்டிஷன்ஸ் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்ணனும்... வரட்டுமா..?!?
என்னக்கொடுமை சார்! பீச்ல சுட்டெரிக்கும் வெயிலுலும் காம விளையாட்டுக்கள் நடத்துறவங்கள முதலில் காவல் துறை நிறுத்தட்டம் அப்புறம் கிரிக்கெட்டுக்கு வரட்டும்.
ReplyDeleteபீச் தவிர லோக்கலில் பல கார்ப்பரேஷன் கிரவுண்டுகள் கிரிக்கெட் விளையாட வசதியாகவே இருக்கு, தி.நகர் சோம சுந்தரம் பார்க்குக்கு(நார்த் உஸ்மான் ரோட்,ஜாய் அலுக்காஸ் பக்கம்) ஒரு ஞாயிறு வந்து பாருங்க தெரியும். ரஞ்சி அணியில் ஆடுறவங்க கூட அங்கே ஆடிகிட்டு இருப்பாங்க!
ஒரு காலத்தில் எல்.பாலாஜி அங்கே ஆடுவதைப்பார்த்துள்ளேன்.
வருகைக்கு நன்றி வவ்வால் சார்.
ReplyDeleteதி.நகர் சோம சுந்தரம் கிரவுண்டில் நானும் விளையாடிருக்கேன். பல நேரங்களில் பிட்ச் கிடைக்காதுங்க. பிட்ச் கெடைக்கலைன்னா நம்ம பசங்களும் oppnonent team'ம் போடற சீன் இருக்கே.. அப்பப்பா...
பாலாஜி டீமை எதிர்த்து நாங்களும் விளையாடிருக்கோம். மைலாப்பூர் PS கிரவுண்டில்.. :)
இந்த மாதிரி ரூல்ஸ் எல்லாம் ஒரு ரெண்டு வாரத்துக்கு தான் :)- அதுக்குப்பிறகு எல்லாம் நார்மல் ஆகிடும்.
ReplyDeleteஉண்மையிலே இது கொடுமை தான் சார் . (நைட் ஷிப்ட் முடிச்சு அப்படியே காலங்காத்தால பீச்சுக்கு போய் விளையாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது )
ReplyDelete@ மணி - அப்படி தெரியல மணி.. பொறுத்திருந்து தான் பார்க்கணும்!!!
ReplyDelete@ ஜெனோவா - நீங்களுமா :)
சச்சினாகவும், பிரெட் லீயாகவும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் கிரிக்கெட் விளையாடும் 2000-3000 பேர்களில் நானும் ஒருவன்./////////
ReplyDeleteஆஹா......அதை பார்க்கும் வாய்ப்புகூட எனக்கு இல்லயே
விடு மச்சான். நேத்து இந்தியாவே தோத்துடுச்சு"னு மொக்கையாய் ஆறுதலும் சொல்லிக் கொள்வதுண்டு.///////////
உங்க பசங்க மெரினாவுல பொய் வெள்யாடும்போதுகூட இதே நெலமைதான்...கவலயே படாதிங்க...பிள்ளைபூச்சி டீமோட மட்டும் தான் ஜெய்க்கும் நம்ம பூச்சி
வாங்க கிருத்திகா.. கருத்துக்கு நன்றி!!!
ReplyDeleteதலைப்பை பார்த்த உடனே மனதிற்குள் ஓடிய காட்சி..Chennai-28 தான்! பெரிய கிரிக்கெட் விசிறி இல்லை தான், ஆனாலும் ரசித்து படித்தேன்! கவலை படாதீங்க.. இதெல்லாம் சும்மா நாங்களும் இருக்கோம் நு காட்ட! :)
ReplyDeleteநன்றி ரோஹிணி!
ReplyDelete