Wednesday, November 4, 2009

10/10 — பிடித்ததும், பிடிக்காததும்

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நண்பர் நர்சிம்மிற்கு நன்றிகள்.

***************************

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****
இதோ எனது பதில்கள்:

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ராகுல் காந்தி (தன் தந்தையைப் போன்றே வசீகரம்)
பிடிக்காதவர்: விஜய டி.ராஜேந்தர்

2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுஜாதா
பிடிக்காதவர்: நான் அதிகம் பேரை படித்ததில்லை என்பதால் அப்படி யாரும் இல்லீங்கோ.

3. கவிஞர்
பிடித்தவர்: வாலி
பிடிக்காதவர்: பேரரசு

4. இயக்குனர்
பிடித்தவர்: ஷங்கர்
பிடிக்காதவர்: (மீண்டும்) பேரரசு

5. நடிகர்
பிடித்தவர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பிடிக்காதவர்: சிபிராஜ்

6. நடிகை
பிடித்தவர்: அனுஷ்கா (அருந்ததி பார்த்ததிலிருந்து)
பிடிக்காதவர்: மகேஸ்வரி (யாருன்னு தெரியலையா? தப்பிச்சீங்க விடுங்க..)

7.இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா

8. தொழிலதிபர்
பிடித்தவர்: அம்பானி (சாமானியனிடமும் செல்போன் இருக்கக் காரணமானவர்)
பிடிக்காதவர்: விஜய் ஈஸ்வரன் (QuestNet மோசடி நிறுவனர்)

9. பதிவர்
பிடித்த பதிவர்: நர்சிம் (அவர் இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததால் மட்டுமல்ல)
பிடிக்காத பதிவர்: விரைவில்... (யாருமில்லன்றத எப்படி சொன்னேன் பார்த்தீங்களா)

10. விளையாட்டு
பிடித்தது: கிரிக்கெட்
பிடிக்காதது: Bullfighting (பாவம்.. அந்த மாட்ட உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)

*******************************

தொடர அழைப்பது..

1. அவிய்ங்க ராசா
2. ஜாக்கி சேகர்

10 comments:

  1. நல்லாயிருக்கு.... அனைத்து பதில்களும்.

    ReplyDelete
  2. //பாவம்.. அந்த மாட்ட உசுபேத்தி உசுபேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)
    //

    ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தோணுதே..,

    ReplyDelete
  3. குட்.ஆன்சர்ஸ்..தல மாதிரியே நீங்களும்...

    ReplyDelete
  4. மகேஸ்வரி பாவங்க..உட்டுடுங்க :)

    சிபிராஜ்

    இந்த இரண்டும் உங்கள் நியாபக சக்தியைக் காட்டுகிறது. ஸ்பெஷலா எதாவது சாப்புடுறீங்களா ? :)

    ReplyDelete
  5. அனைத்து பதில்களும் பிடித்துள்ளது!!

    ReplyDelete
  6. நன்றி கருணாகரசு..

    சுரேஷ்... பழனி முருகனறிய ஒரு குத்தும் இல்லீங்க சாமியோவ்.. :)

    நன்றி வசந்த்..

    வாங்க பின்னோக்கி.. இவங்க ரெண்டு பேர ஞாபகம் வச்சிக்கறதுக்கு ஸ்பெஷலா வேற எதாச்சும் சாப்டணுமா என்ன?? :)

    நன்றி தேவன் சார்..

    ReplyDelete
  7. //பிடிக்காதவர்: (மீண்டும்) பேரரசு
    பிடிக்காதவர்: மகேஸ்வரி (யாருன்னு தெரியலையா? தப்பிச்சீங்க விடுங்க..)
    பிடிக்காத பதிவர்: விரைவில்... (யாருமில்லன்றத எப்படி சொன்னேன் பார்த்தீங்களா
    பிடிக்காதது: Bullfighting (பாவம்.. அந்த மாட்ட உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)//

    மிகவும் ரசிக்கும் படியான பதில்கள் மணிகண்டன் ;-))
    தொடர்ந்து எழுதுங்கள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி ஜெனோவா.. தொடர்ந்து வருகை தாருங்கள்!!!

    ReplyDelete
  9. ரசித்தேன் பாஸ்.

    ReplyDelete