Sunday, October 18, 2009

தீபாவளி – சிறுகதை

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
இது என் முதல் முயற்சி.. முன்பே யோசித்து வைத்திருந்ததை தீபாவளிக்காக சற்று மாற்றியமைத்து இருக்கிறேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி!!!

*********************
diwali
விடிந்தால் தீபாவளி...

"எனக்கு சுறுசுறு மத்தாப்பு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........." மூன்று வயது சௌம்யாவின் குரல் அந்த பிளாட்டின் இரண்டாவது மாடி முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது...

வேணாம்டா செல்லம்... அப்புறம் உன் கையில "ஊஊஊ" பட்டுடும்.. என்று சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார் அவளின் அப்பா..

சத்தம் பொறுக்காமல் கதவை மூடிவிட்டு வந்தார் சீனிவாசன்.

"அப்பப்பா... குழந்தையா அது?? என்ன கத்து கத்துது??? ரெண்டு நிமிஷம் டிவியில் நியூஸ் பார்க்க முடியுதா...? அடுத்த அசோசியேஷன் மீட்டிங்கில் கம்ப்ளைண்ட் பண்ணனும்" என்றவாறே இருக்கையில் அமர்ந்தார்..

"நான் கூட உங்ககிட்ட சொல்லனும்னு நெனைச்சேங்க... சில சமயம் அந்த குழந்தை போடற சத்தத்துல மதியத்துல தூங்கவே முடியறதில்ல..." - இது சீனிவாசனின் மனைவி கமலம்மாள்...

சீனிவாசன். தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் அடையாளமாக கை, கால், முகம் என அங்கங்கு சிறுசிறு தீக்காயங்களின் வடுக்கள் உண்டு அவருக்கு. கமலம்மாள் கணவன் குணமறிந்து நடக்கும் இல்லாள். இவர்களின் ஒரே மகன் ஸ்ரீதர். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே மனைவியுடன் தனிக்குடித்தனம் போய்விட்டான். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் மாதம் ஒருமுறையோ இருமுறையோ வந்து இவர்களைப் பார்த்துவிட்டுச் செல்லுவான். சீனிவாசனுக்கும் கமலம்மாளுக்கும் பேரன் ஹரி தான் உலகம். அவனுக்கோ இவர்களிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. தன் அம்மாவைப் போலவே..

நாளை தீபாவளிக்கு வரப்போகும் மகன், மருமகள் மற்றும் பேரனுக்கான புத்தாடைகளை எடுத்து பூஜை அறையில் தயாராய் வைத்துவிட்டு வந்த கமலம்மாள், "என்னங்க... ஸ்ரீதர் காலைல எத்தனை மணிக்கு பேரனை அழைச்சிக்கிட்டு வருவான்னு ஒரு போன் போட்டுக் கேளுங்களேன்..." என்றார்.

சரி என்றவர், தொலைபேசியை கையிலெடுத்தார்.

"ஹலோ... ஸ்ரீதர்.. அப்பா பேசறேன்டா..."

"சொல்லுங்கப்பா.."

"நாளைக்கு தீபாவளி.. நீங்க எல்லாம் எத்தனை மணிக்கு வருவீங்கன்னு..."

சொல்லி முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் ஸ்ரீதர்...

"இல்லப்பா... நாளைக்கு நாங்க வரல..."

"ஏன்டா. என்னாச்சு...??"

"பின்னே என்னப்பா.. போன தடவை வந்தபோது நீங்க ஹரிய தூக்கி கொஞ்சியிருக்கீங்க.. உங்க தீக்காயத்தைப் பார்த்து பயந்து அவனுக்கு ரெண்டு நாள் ஜுரமே வந்துடுச்சு.. அதனால... நல்ல நாளும் அதுவுமா எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும்னு உங்க மருமக சொல்றாப்பா... புரிஞ்சுக்குங்க.. நான் காலையில் பேசறேன்.. வைக்கிறேன்..."

பதிலுக்குக் காத்திராமல் மறுமுனை துண்டிக்கப் பட்டது.

"என்னங்க சொன்னான்...??" ஆவலுடன் கேட்டார் கமலம்மாள்...

விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் கமலம்மாளின் கண்களை கண்ணீர் தழுவியிருந்தது.

"எனக்கு மனசே சரியில்ல.. அந்த சட்டைய எடு.. நான் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.." என்றபடி கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் இவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும், குழந்தை சௌம்யா வேகமாக ஓடிவந்து இவரின் மேல் மோதிக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டார்.

சட்டென இவர் கைகளைப் பார்த்தவள்... "அச்சச்சோ... தாத்தா கையில ஊஊஊ பட்டிருக்கே... வலிக்குதா தாத்தா??.." தன் பிஞ்சுக் கைகளால் அவர் வடுக்களை தடவியபடி கேட்டாள்...

பட்டென வாரி அணைத்துக் கொண்டவர்.. "இல்லடா கண்ணா... வா.. தாத்தா உனக்கு சுறுசுறு மத்தாப்பு வாங்கித் தரேன்..." என்று கண்ணீருடன் முத்தமிட்டார்.

மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்கினார்கள் இருவரும்... பட்டாசுக் கடை நோக்கி...

17 comments:

  1. கதை நல்லா இருக்கு மணிகண்டன். கலக்குங்க.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க மணிகண்டன்...

    ReplyDelete
  3. adade
    nalla irukku mudivai yosikka mudinjuduthu munname so ethirpaara mudivu kudunga usual aana muduvu vendaame

    ReplyDelete
  4. முதல் முயற்சி என்பதை நம்ப கஷ்ட்டமாக இருக்கிறது. மிகவும் அருமை. என்னுடைய முதல் சிறுகதை முயற்சிக்கும், உன்னுடைய சிறுகதை முயற்சிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது! நானும் சென்ற வருட தீபாவளியன்று தான் முதல் சிறுகதையை எழுதி வெளியிட்டேன். அதை விட பெரிய விஷயம், அதன் தலைப்பும் "தீபாவளி" தான்! வாழ்த்துக்கள் மணி! மேலும் பல கதைகளை தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  5. நல்லா சூடு வெச்சீங்க. பாப்பாவிற்குமில்ல. தாத்தாவுக்குமில்ல. பணம் மற்றும் மாதுமயக்கத்தில் விலைபோன பிள்ளைகளுக்கு

    ReplyDelete
  6. நன்றி கௌரி!!!
    நன்றி bxbybz!!!
    நன்றி ராசாண்ணே!!!

    ReplyDelete
  7. Semma touching story.. nijamave manasukku kashtama irundhuchu..

    Well written. :)

    ReplyDelete
  8. முதல் முயற்சி.. நல்ல முயற்சி.. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  9. Tough to believe that this is your maiden effort.
    Amazing.
    Brought tears.

    -- Chris

    ReplyDelete
  10. நன்றி நித்யா!
    நன்றி கார்க்கி!
    நன்றி கிறிஸ்!

    ReplyDelete
  11. Simply Suberb da.. neatly narrated.. again i suggest you.. please dont post it public da.. i am really impressed.

    ReplyDelete
  12. Well written! I wish atleast the next generation will not be like that "son" character!
    Hope you have a great Diwali!

    ReplyDelete
  13. நன்றிடா செந்தில்..
    நன்றி ரோஹிணி..

    ReplyDelete
  14. @ இய‌ற்கை..
    எனது கதையை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி... மகிழ்ச்சியாய் உணர்கிறேன்!!!

    ReplyDelete