Sunday, July 26, 2009

சுனாமி - டிசம்பர் 26, 2004

நேற்று முன்தினம் மும்பையை சுனாமிப்(?) பேரலைகள் தாக்கியதை செய்தியில் கண்டேன்...
டிசம்பர் 26, 2004 அன்று காலை, சுனாமி சென்னையைத் தாக்கிய நேரத்தில் மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்... எப்படியோ ஓடிப் பிழைத்தேன் அன்று என் நண்பர்களுடன்... அதன் கோரத்தை என்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க முயன்றிருக்கிறேன்....

(குறிப்பு:)கொஞ்சம் பெரிதாகத் தான் இருக்கும்... பொறுத்துக் கொள்ளவும்..

====================================

டற்கரையில் இனிமையாய் கால் பதித்த நேரங்கள் முடிந்து
கண்ணீர் மை தொட்டு கவிதை எழுதும் நேரமிது...

அந்த விடிகாலை வேளையில் சுமத்ரா கொண்ட சிறு நடுக்கம்
எத்தனையோ பேருக்கு விடியாமலேயே போய்விட்டது...

நீ எம்பிக்குதித்த சொற்ப நிமிடங்களில் எழில் கொஞ்சிய இடமெல்லாம்
எமன் வந்து போன இடமாய் உருமாறிக் கிடக்கிறது...

இனி உன் கரைதேடி ஓய்வெடுக்க வருவோரெல்லாம்
உயிரைக் கையில் பிடித்து ஓடவும் தயாராய்த் தான் வர வேண்டும்...

நீ குதறிவிட்டுப் போனதில் அழகிய பிஞ்சுகள் எல்லாம்
அழுகிய பிரேதங்களாய்... எழுதும் போதே இப்படி வலிக்கிறதே..
நீ ஏறி மிதித்தபோது எப்படி வலித்திருக்கும்??

இவை மட்டுமா???

உன்னைக் கவிதையாய் வர்ணித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறாய்...

கடவுளாய் வணங்கியவர்கள் வயிற்றில் கலவரத்தைக் கரைத்திருக்கிறாய்...

பெற்றவர்கள் கண்முன்னே பிள்ளைகளைத் தின்றிருக்கிறாய்...

உற்றவர்களையும் உடமைகளையும் அடாவடியாய் அடித்துச் சென்றிருக்கிறாய்...

உன் அலையோசையால் பலரின் உயிரோசை அடக்கி இருக்கிறாய்...

இதுவரை பொழுதுபோக்கு அம்சமாய் இருந்த நீ
இன்று பலரது உயிர்போக்கும் அபாயமாய் உருவெடுத்திருக்கிறாய்...

உன் அலைகரம் நீட்டி உலக வரைபடத்தில்
ஒருசில கிராமங்களை கிழித்துப் போட்டிருக்கிறாய்...

ஏட்டில் மட்டுமே படித்து வந்த அனுபவங்களை
எதிரில் வந்து நிகழ்த்திக் காட்டியிருக்கிறாய்...

அலையோரமாய் தங்கள் பெயர் எழுதி விளையாடியவர்களை எல்லாம்
இறந்தவர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறாய்...

ஏனிந்த வெறியாட்டம்???

நீதான் நீளத்திலும் ஆழத்திலும் பெரியவள் என்பதை ஒப்புக்கொண்டு விட்டோமே?
பின் ஏன் உயரத்திலும் உன்னைப் பெரியவளாய்க் காட்ட எங்கள் உயிரோடு விளையாடுகிறாய்???

என்றாவது ஒருநாள் அஸ்தியாய் வந்து உன்னுள் தானே கரையப் போகிறோம்?
அதற்குள் நீயே அவசரப்பட்டு எங்கள் உயிர் பறித்ததின் அவசியம் என்ன???

எங்கள் உயிர்களை ஓடிப்பிடித்து விளையாடியதற்கும்,
இப்போது உடல்களை ஒளித்து வைத்து விளையாடுவதற்கும் காரணம் என்ன???

எங்களை மரண ஓலை வாசிக்க வைத்துவிட்டு
நீ மட்டும் மௌனம் பேசுவதின் மர்மம் என்ன???

உன் சுழல்நாக்கு வளைத்து விழுங்கியதில்
அனைத்தையும் பறிகொடுத்தவர்களுக்கு உன் பதில் என்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடைகொடுக்க முடியுமா உன்னால்???

புலி பதுங்குவது பாய்வதற்குத் தான்..
அலை பதுங்குவது பல உயிர்களை மாய்ப்பதற்குத் தான்
என்பதை சொல்லாமல் சொல்கிறாயா???

எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடு!
ஏனெனில்,
உன்னைக் கேள்வி கேட்க அடுத்தமுறை நான் இருப்பேனா? இல்லை
என் பிணத்தையே தேடிக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை...

20 comments:

  1. கொஞ்சம் வைரமுத்து வாசனை அடிக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது மற்றவையும் எழுதுங்கள் (இருக்கும் இரண்டு பதிவுகளுமே கவிதைகளாய் இருப்பதால் அப்படி சொல்கிறேன், மற்றபடி உங்கள் எழுத்துகள் பற்றி எனக்கு தெரியாது)

    ReplyDelete
  2. It is good Mani. Please write others too(like essay, vimarsanam, pathivu..). You have already proved that you are good in Poem. Also utilise your free time only for blogging, not the working time. Because excessive blogging will spoil your career..:)

    ReplyDelete
  3. @ ராஜா | KVR...
    நன்றி ராஜா... இந்தக் கவிதை வைரமுத்துவின் தொலைகாட்சி கவிதையை பார்த்த பாதிப்பில் எழுதியது தான்... விரைவில் மற்றவை பற்றியும் எழுதுகிறேன்!

    @ அவிங்க ராஜா
    நன்றி ராஜா அண்ணே.. விரைவில் மற்றவை பற்றியும் எழுதுகிறேன்! கண்டிப்பாக உங்கள் அறிவுரையை ஏற்கிறேன்...

    ReplyDelete
  4. நீதான் நீளத்திலும் ஆழத்திலும் பெரியவள் என்பதை ஒப்புக்கொண்டு விட்டோமே?
    பின் ஏன் உயரத்திலும் உன்னைப் பெரியவளாய்க் காட்ட எங்கள் உயிரோடு விளையாடுகிறாய்?//

    போன்ற மிகச்சில வரிகளை ரசிக்கமுடிந்தது.

    மற்றபடி ஸாரி மணிகண்டன், சிறப்பாகச் சொல்லமுடியவில்லை.

    முந்தைய கவிதைகளையும் கண்டேன். அழகானவை என்றாலும் படித்துப்படித்துச் சலித்தவை.

    ஏற்கனவே மணிகண்டன் என்ற பெயரில் ஒருவர் அனைவரும் அறிந்தவகையில் சிறப்பாக http://thodar.blogspot.com/ என்ற முகவரியில் இயங்கிவருவதால் நீங்கள் பெயர்மாற்றம் குறித்து யோசித்தால் குழப்பம் தவிர்க்கலாம்.

    ReplyDelete
  5. வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி ஆதி சார்..
    விரைவில் குறைகள் களைய முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  6. இன்னும் பல தளங்களில் செல்லுங்கள் அப்புறம் உங்களை பற்றி பேசலாம்... மூன்று வயது குழந்தையை பற்றி என்ன சொல்வது...??? உங்கள் புது வருகைக்கு வாழ்த்துக்கள் மேலும், பின்னுட்டம் வர வில்லை என்ற கவலை வேண்டாம்... தொடர்ந்து எழுதுங்கள்... உங்கள் எழுத்து பிடித்து இருப்பின் அவர்களே உங்களை தேடி வருவார்கள்....ரசிப்ப போல் தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜாக்கி அண்ணே.. விரைவில் அனைத்து விஷயங்கள் பற்றியும் எழுத முயல்கிறேன்...

    ReplyDelete
  8. தொடர்ந்து எழுதுங்கள்.

    விமர்சனங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பாங்கு சந்தோஷமாய் இருக்கிறது!

    ReplyDelete
  9. நன்றி பரிசல்...

    ReplyDelete
  10. பெயரை மாத்தியாச்சு ஆதி சார்...

    ReplyDelete
  11. சுனாமி பற்றி பொதிகையில் டாகுமெண்டரி வந்தது. தமிழில் எழுதியது கவிஞர் எழிலன். அதன் ஆங்கில மொழியாக்கம் செய்தது நான். அது பற்றி பதிவு இதோ. ஆங்கில ஸ்க்ரிப்டும் தரப்பட்டுள்ளது.

    பார்க்க: http://dondu.blogspot.com/2008/02/blog-post_06.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. வாழ்த்துகள்.!

    ReplyDelete
  13. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி டோண்டு சார்...
    அவசியம் பார்க்கிறேன்..

    ReplyDelete
  15. மிக்க நன்றி செய்திவளையம்!!!

    ReplyDelete
  16. புது பெயருக்கு வாழ்த்துஅக்ள் சகா

    ReplyDelete
  17. நன்றி கார்க்கி... வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!

    ReplyDelete
  18. சுனாமி --- வார்த்தைகள் நலம்.

    ReplyDelete
  19. நண்பரே சுனாமி அடித்தது 25.12.2004 அன்று ஞாயிறு காலை நீங்கள் குறிப்பிட்டது 26.12.04 மாற்றிக்கொள்ளுங்கள். அன்று கிறிஸ்மஸ்.
    கவிதை போல சொல்லியிருப்பது அருமையாக உள்ளது. நல்ல பதிவு.

    ReplyDelete
  20. பித்தன் சார்.. அன்னிக்கு ஞாயிறு தான்.. ஆனால் அது 26-12-2009.. கிறிஸ்மஸ்க்கு அடுத்த நாள்...

    ReplyDelete